முத்தி இலம்பகம் |
1387 |
|
|
என்பது திருக்குறள் (1083). வண்ணித்தல் - புனைந்துரைத்தல். பெண் - பெண்மைத் தன்மை, கண்ணிற்று - கண்ணையுடையது.
|
( 81 ) |
2459 |
அரத்தக மருளிச் செய்த | |
|
சீறடி யளிய தம்மாற் | |
|
குரற்சிலம் பொலிப்பச் சென்னிக் | |
|
குஞ்சிமேன் மிதிப்ப நோற்றான் | |
|
றிருக்குவாய்க் கிடந்த மார்பிற் | |
|
சீவக னாங்க ளெல்லாந் | |
|
தரித்திலந் தவத்தை யென்று | |
|
தார்மன்ன ரேமுற் றாரே. | |
|
(இ - ள்.) மருளி அரத்தகம் செய்த அளிய சீறடி தம்மால் - (பிறர்) மருளச் செம்பஞ்சி யூட்டிய அளியன வாகிய சிற்றடிகளாலே; சிலம்புக் குரல் ஒலிப்பச் சென்னிக் குஞ்சிமேல் மிதிப்ப நோற்றான் - சிலம்பிற் குரல் எழ முடியிற் குஞ்சியின்மேல் மிதிக்கும்படி நோற்றவன்; திருக்குலாய்க் கிடந்த மார்பின் சீவகன் - திருமகள் குல்விக் கிடந்த மார்பினையுடைய சீவகனே; நாங்கள் எல்லாம் தவத்தைத் தரித்திலம் என்று - யாங்கள் எல்லாம் அதற்குத் தவம் புரிந்திலேம் என்று; தார் மன்னர் ஏமுற்றார் - தாரணிந்த அரசர் மயக்குற்றார்.
|
(வி - ம்.) மருளி - மருள : எச்சத்திரிபு.
|
அரத்தகம் - செம்பஞ்சுக் குழம்பு. அளிய - அளிக்கத்தக்கன. சென்னிக்குஞ்சி - தலைமயிர்.
|
( 82 ) |
2460 |
கோவிந்த னென்னுஞ் செம்பொற் | |
|
குன்றின்மேற் பிறந்து கூர்வேற் | |
|
சீவக னென்னுஞ் செந்நீர்ப் | |
|
பவளமா கடலுட் பாய்வான் | |
|
பூவுந்தி யமுத யாறு | |
|
பூங்கொடி நுடங்கப் போந்து | |
|
தாவிரி வேள்விச் சாலை | |
|
மடுவினுட் டாழ்ந்த தன்றே. | |
|
(இ - ள்.) பூ உந்தி அமுத யாறு - மலர் உந்தியை உடைய அமுதமாகிய யாறு; கோவிந்தன் என்னும் செம்பொன் குன்றின்மேல் பிறந்து - கோவிந்தன் என்னும் பொன்மலையிலே பிறந்து; கூர்வேல் சீவகன் என்னும் செந்நீர்ப் பவளமா கடலுள் பாய்வான் - கூரிய வேலையுடைய சீவகன் என்கிற புதிய நீரையுடைய
|