பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1388 

பவளப் பெருங் கடலிலே சேரவேண்டி; பூங்கொடி நுடங்கப் போந்து - மலர்க்கொடி அசைய வந்து; தாஇரி வேள்விச்சாலை மடுவினுள் தாழ்ந்தது - குற்றமற்ற வேள்விச்சாலையாகிய மடுவிலே (சிறிது பொழுது) தங்கிறது.

   (வி - ம்.) செந்நீர் - புதுநீர். உந்தி, கொப்பூழையும் ஆற்றிடைக் குறையையும்; கொடி, இடையையும் படர்கொடியையும் உணர்த்தும். பூவுந்தி : உவமமும் வேற்றுமையுந் தொக்கன என்பர் நச்சினார்க்கினியர்.

( 83 )
2461 சாணிடை நெடிய வாட்கண்
  டளையவிழ் குவளை பூப்பப்
பூணுடை முலையின் பாரம்
  பொறுக்கலாச் சுளிவின் மேலு
நாணட நடுங்கிக் கையா
  னகைமுகம் புதைத்த தோற்றஞ்
சேணிடை யரவு சோ்ந்த
  திங்களை யொத்த தன்றே.

   (இ - ள்.) பூண் உடை முலையின் பாரம் பொறுக்கலாச் சுளிவின் மேலும் - பூணணிந்த முலைகளின் சுவையைச் சுமக்க முடியாத வருத்தத்தின் மேலும்; நாண் அட நடுங்கி - நாண் வருத்தலாலே நடுங்கி; சாணிடை நெடிய வாள்கண் தளை அவிழ் குவளை பூப்ப - நடுவு சாணளவாக நெடிய வாளனைய கண் அலர்கின்ற குவளை போலப் பொலிவுறும்படி; கையால் நகைமுகம் புதைத்த தோற்றம் - கையினால் முறுவலையுடைய முகத்தைப் புதைத்த காட்சி; சேணிடை அரவு சேர்ந்த திங்களை ஒத்தது - விசும்பிடையிலே பாம்பு பற்றிய திங்களைப் போன்றது.

   (வி - ம்.) கையிடையே கண் தோன்றுதலின், அலர்கின்றாற் போன்றது என்றார். நாணத்தால் முகம் புதைத்தாள்.

( 84 )
2462 முத்துமிழ் திரைக ளங்க
  மொய்கொள் பா தால முத்தீ
யொத்தன வேலை வேள்வி
  யொலிகட னான்கு நாண
வைத்தநான் மறையு நீந்தி
  வான் குண மென்னுஞ் சாலி
வித்திமே லுலகத் தின்பம்
  விளைத்து மெய் கண்டநீரார்.