முத்தி இலம்பகம் |
1389 |
|
|
(இ - ள்.) முத்து உமிழ் திரைகள் அங்கம் - முத்துக்களைச் சிந்தும் அலைகள் அங்கமாகவும்; மொய் கொள் பாதாலம் முத்தீ - வலிகொண்ட பாதாலம் முத்தீ யாகவும்; ஒத்தன வேலை வேள்வி - ஒத்தனவாகிய கரைகள் வேள்வியாகவும்; ஒலிகடல் நான்கும் நாண வைத்த - ஒலிக்கின்ற கடல் நான்கும் நாணும்படி வைத்த; நான்மறையும் நீந்தி - நான்கு மறைகளையும் நீந்தி; வான்குணம் என்னும் சாலி - சிறந்த தொழிலாகிய சாலிநெல்லை; வித்தி - விதைத்து ; மேல் உலகத்து இன்பம் விளைத்து - துறக்க வின்பத்தை விளைவித்து; மெய்கண்ட நீரார் - வீடுகண்ட இயல்பினராகிய அந்தணர்,
|
(வி - ம்.) அடுத்த செய்யுட்களுடன் தொடரும்.
|
மொய்கொள் பாதாலம் என்றது வடவாமுகாக்கினி; கடலிடையிலே பாதாலத்தே செல்ல நீரைவாங்குதலின், அதற்குப் பாதாலமென்று பெயர் கூறினார். குணம் : ஆகுபெயர்.
|
( 85 ) |
2463 |
தருமணற் றருப்பை யார்ந்த | |
|
சமிதையிம் மூன்றி னானும் | |
|
விரிமல ரணிந்த கோல | |
|
வேதிகை யியற்றி யானெ | |
|
யொருமணி யகலுட் பெய்தோர் | |
|
பொன்னக லார்ந்த தூப | |
|
மிருமணி யகலு ணீர்பெய் | |
|
திடவயி னிரீஇயி னாரே. | |
|
(இ - ள்.) தருமணல் தருப்பை ஆர்ந்த சமிதை இம்மூன்றிரீனுலும் - கொண்டுவந்த மணலும் தருப்பையும் நிறைந்த சமிதையும் ஆகிய மூன்றினாலும்; விரிமலர் அணிந்த கோல வேதிகை இயற்றி - மிகுதியான மலரணிந்த ஒப்பனையுடைய திண்ணையை அமைத்து; ஒரு மணி அகலுள் ஆன் நெய் பெய்து-ஒரு மணி அகலிலே ஆவின் நெய்யை வார்த்து; இரு மணி அகலுள் நீர் பெய்து - இரண்டு மணி அகலிலே நீரை வார்த்து; ஓர் பொன் அகல் ஆர்ந்த தூபம் - ஒரு பொன் அகலிலே அகில் நெய் முதலிய மணம் நிறைந்த தூபத்தைப் (பெய்து); இடவயின் இரீ இயினார் - வைக்கவேண்டிய இடங்களிலே வைத்தார்.
|
(வி - ம்.) தருமணல்: தண்டிலார்த்தமாகக் கொண்டு வந்த மணல். தண்டிலமாவது தீயை வளர்க்குமிடத்தே சதுரமாகப் பரப்புகின்ற மணல். ஆர்ந்த சமிதை; சமிதைக்குக் கூறும் இலக்கணம் நிறைந்த சமிதை; என்றது பருதிகளையும் வேண்டும் சமிதைகளையும். வேதிகை : திருமணத்திற்கென விட்ட நான்கு தூண்களையுடைய திண்ணை. இயற்றுதலாவது : திண்ணையில் தீயை வளர்க்குமிடத்தே தண்டிலத்தைக்
|