முத்தி இலம்பகம் |
1390 |
|
|
கற்பித்து அதிலே தீயை எழுப்பித் தருப்பையை நான்கு விளிம்பிலும் சூழவைத்துப் பருதிகளைக் கீழ்த்திசை ஒழிந்த திசைகளிலே வைத்தல் முதலியன. இருமணி அகல் என்றது பிரணீத பாத்திரமும் புரோட் சணீபாத்திரமும். ஒரு மணி அகல் ; ஆச்சியாஸ் தாலி. பொன் அகலார்ந்த தூபம் பெய்து என்றதுவும் மேற்செய்யுளில் ஆன்பாலவி யென்றதுவும் மதுபர்க்கார்த்தமாக வைத்தவை.
|
”சங்கதாய வராய சமர்ப்யதே சுவாமிகாது வதூர் ஜல பூர்வகம்!. |
|
ஸ்தாப்யதே விவாக மகீதலே பாவகோ விதிவத் மதுபர்க்க: !!” |
|
என்று திருமணத் திண்ணையிலே தீயை வளர்த்து மதுபர்க்கங் கூறினார்.
|
( 86 ) |
2464 |
நெற்பொரி நிறையப் பெய்து | |
|
நிழலுமிழ் செம்பொன் மூழிக் | |
|
கற்புரி கடவு ளான்பா | |
|
லவியொடு கலப்ப வைத்து | |
|
மூற்பெரி யானை யாகத் | |
|
தருப்பையான் முடிந்து மூன்று | |
|
பொற்புரி வரையும் பொய்தீர் | |
|
சமிதைக ளிரண்டும் வைத்தார். | |
|
(இ - ள்.) நிழல் உமிழ் செம்பொன் மூழி - ஒளியுமிழும் பொற்கலத்திலே; நெற்பொரி நிறையப் பெய்து - நெற்பொரியை மிகவும் பெய்து; கல்புரி கடவுள் ஆன்பால் அவியொடு கலப்ப வைத்து - கற்புரி கடவுளாகிய அம்மியையும் (பசுவின் பாலும் நெய்யும் கலந்த) ஆன்பாலாவியொடு கலக்கும்படி வைத்து; முன் பெரியானையாகத் தருப்பையான் முடிந்து - பிரமனை வேள்வித் தருப்பையாலே பிரமமுடியாக முடிந்து; மூன்று பொன் புரி வரையும் - மூன்று பொன் புரிவரையும் கீறி; சமிதைகள் இரண்டும் வைத்தார் - இரண்டு சமிதைகளையும் வைத்தார்.
|
(வி - ம்.) பொரி - இலாச ஹோமார்த்தமான பொரி. கற்புரி கடவுள் - அச்மா ரோபணார்த்தமான அம்மி. ஆன்பாலவி பாலும் நெய்யுங் கலந்தது. மூன்று பொற்புரிவரை யென்றது, தண்டிலத்தை மேற்கே தொடங்கிக் கிழக்கே முடியத் தெற்கில் விளிம்பிலம் நடுவிலும், வடக்கில் விளிம்பிலும் தெற்கே தொடங்கி வடக்கேமுடிய மேற்கே விளிம்பிலும் நடுவிலும், கிழக்கில் விளிம்பிலும் கீறின கீற்றுக்கள்.
|
தீயை எழுப்புவதற்கு முன்பே கீறுகின்றவற்றை ஈண்டுக் கூறினாரென்றுணர்க. முதன்மூன்று கீறிக் குறுக்கு மூன்று கீறுதல் தோன்றமுன் றென்றொழியாது பின்னரும் பொலிவு பெறப் புரிந்தவரை என்றார். மூன்று வரையைக்குண்டம் என்றல் பொருந்தாது. பொய்தீர் சமிதைகள் இரணடாவன : தென்கீழைக் கோடியிலும் வடகீறைக் கோடியிலும் வைக்கும் ஆகார சமிதைகள் இரண்டும்.
|
( 87 ) |