பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1391 

2465 மந்திர விதியின் மாண்ட
  சிறுவிரற் றருப்பை சூழ்ந்து
முந்துநா மொழிந்த நெய்யை
  முனைமுதிர் தருப்பை தன்னான்
மந்திரித் தமைய முக்கான்
  மண்ணிமற் றதனை நீக்கிச்
சிந்தித்து மறையிற் செந்தீத்
  தண்டிலத் தங்கண் வைத்தார்.

   (இ - ள்.) சிறு விரல் தருப்பை சூழ்ந்து - சிறு விரலாலே தருப்பையைச் சூழ்ந்து; மந்திர விதியின் மாண்ட, முந்தும் நாம் மொழிந்த நெய்யை - மந்திர விதியினாலே சிறப்புற்ற, முன்னர் நாம் கூறிய நெய்யை; முனைமுதிர் தருப்பை தன்னால் மந்திரித்து - முனையாக உள்ள முதிர்ந்த தருப்பையினால் மந்திரித்து; அமைய முக்கால் மண்ணி - பொருந்த மும்முறை கழுவி; அதனை நீக்கி - அதனைச் செந்தீயிலே போகட்டு; மறையின் சிந்தித்து - மறைப்படியே சிந்தித்து; செந்தீத் தண்டிலத்து அங்கண் வைத்தார் - செந்தீக்கு அருகே தண்டிலத்தில் வைத்தார்.

   (வி - ம்.) செந்தீக்கு அருகே நெய்யை வைத்தார். 'முனைமுதிர்ந்த நெய்' என்பர் நச்சினார்க்கினியர்.

( 88 )
2466 தண்டிலத் தகத்திற் சாண்மே
  லெண்விரற் சமிதை நானான்
கெண்டிசை யவரு மேத்தத்
  துடுப்புநெய் சொரித லோடுங்
கொண்டழற் கடவுள் பொங்கி
  வலஞ்சுழன் றெழுந்த தென்ப
தெண்டிரை வேலி யெங்குந்
  திருவிளை யாட மாதோ.

   (இ - ள்.) சமிதை நானான்கு - சமிதை பதினாறையும்; துடுப்பு நெய் - துடுப்பினால் நெய்யையும்; சோரித லோடும் - சொரிந்த அளவிலே; சாண்மேல் எண்விரல் தண்டிலத் தகத்தில் - சாண்மேல் எண்விரல் அகலமாகப் பரப்பிய தண்டிலத் திடையில்; அழற் கடவுள் கொண்டு - தீக்கடவுள் அவற்றைக் கொண்டு; எண் திசையவரும் ஏத்த - எட்டுத் திசையில் உள்ளவரும் புகழும்படி; தெண்திரை வேலி எங்கும் திருவிளையாட - தௌ்ளிய கடல்சூழ்ந்த நிலவுலகம் எங்கும் செல்வம் விளையாட; வலம் சுழன்று எழுந்தது - வலத்தே சுழன்று எழுந்தது.