பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1392 

   (வி - ம்.) என்ப : அசை.

   தண்டிலம் - ஓமம் பண்ணுதற்குக் குறிப்பிட்ட இடம். துடுப்பு - அகப்பை. தீ வலஞ்சுழன்று எழுந்தது உலகில் திருமிகுதற்கு ஏது வென்க. திரு - செல்வம்.

( 89 )
2467 கரையுடைத் துகிலிற் றோன்றுங்
  காஞ்சன வட்டின் முந்நீர்த்
திரையிடை வியாழந் தோன்றத்
  திண்பிணி முழுவுஞ் சங்கு
முரசொடு முழங்கி யார்ப்ப
  மொய்கொள்வேன் மன்ன ரார்ப்ப
வரசரு ளரச னாய்பொற்
  கலசநீ ரங்கை யேற்றான்.

   வி-ம்.) தீயை வளர்த்து நீர் விடுதலும் (உதகம் பண்ணுதலும்) உளதாதலின், இங்ஙனம் கூறினார்.

( 90 )
2468 குளிர்மதி கொண்ட நாகங்
  கோளைவிடுக் கின்ற தேபோற்
றளிர்புரை கோதை மாதர்
  தாமரை முகத்தைச் சோ்ந்த
வொளிர்வளைக் கையைச் செல்வன்
  விடுத்தவ ளிடக்கை பற்றி
வளரெரி வலங்கொண் டாய்பொற்
  கட்டிறா னேறி னானே.

   (இ - ள்.) நாகம் குளிர் மதி கொண்ட கோளை - அரவு தான் திங்களைக் கொண்ட கோளை; விடுக்கின்றதே போல் - விடுக்கின்றாற் போல; தளிர் புரை கோதை மாதர் தாமரை முகத்தைச் சேர்ந்த - தளிரனைய இலக்கணையின் அழகிய தாமரை மலர் போன்ற முகத்தை மூடிய; ஒளிர் வளைக்கையைக் செல்வன்