முத்தி இலம்பகம் |
1393 |
|
|
விடுத்து - ஒளிரும் வளைக்கையைச் சீவகன் நீக்கி, அவள் இடக்கை பற்றி - அவளுடைய இடக்கையைப் பற்றி; வளர் எரி வலம் கொண்டு - வளரும் தீயை வலம் கொண்டு; ஆய்பொன் கட்டில் ஏறினான் - அழகிய பொற்கட்டிலில் ஏறினான்.
|
(வி - ம்.) 'தளிர் புரை கை' எனவும், 'மாதர் விடுத்து' எனவும் பிரித்துக்கூட்டுவர் நச்சினார்க்கினியர்.
|
பின் செய்தற்குரிய ஓமங்களையும் பண்ணிக் கைப்பிடித்துத் தீயை வலங் கொண்டான்; எனவே, பொரியால் உள்ள ஓமமும் அம்மியில் கால் வைத்ததும் பெற்றாம். கட்டில் - திருமணம் பண்ணி எழுந்திருந்து சாந்தியான கூத்தும் ஆலத்தியும் கண்டு அருந்ததி காணப் போமளவும் இருக்கும் கட்டில், இஃது அரசியல்.
|
( 91 ) |
2469 |
விளங்கொளி விசும்பிற் பூத்த | |
|
வருந்ததி காட்டி யான்பால் | |
|
வளங்கொளப் பூத்த கோல | |
|
மலரடி கழீஇய பின்றை | |
|
யிளங்கதிர்க் கலத்தி னேந்த | |
|
வயினிகண் டமர்ந்தி ருந்தான் | |
|
றுளங்கெயிற் றழுவை தொல்சீர்த் | |
|
தோகையோ டிருந்த தொத்தான். | |
|
(இ - ள்.) விளங்கு ஒளி விசும்பில் பூத்த அருந்ததி காட்டி - விளங்கும் ஒளியை யுடைய வானிலே தோன்றிய அருந்ததி மீனைக் காட்டி; வளம் கொளப் பூத்த கோல மலரடி ஆன்பால் கழீஇய பின்றை - வளமுற மலர்ந்த அழகிய மலரடியை ஆவின் பாலாற் கழீஇய பிறகு; இளங் கதிர்க் கலத்தின் அயினி ஏந்தக் கண்டு - இளவெளி வீசும் கலத்திற் பாவையர் உணவை ஏந்த அதனைக் கண்டு; அமர்ந்திருந்தான் - இலக்கணையுடன் வீற்றிருந்தவன்; துளங்கு எயிற்று உழுனை தொல்சீர்த் தோகையோடு இருந்தது ஒத்தான் - அசையும் ஒளியுறும் பற்களையுடைய புலி பழம் புகழுடைய மயிலுடன் இருந்தது போன்றான்.
|
(வி - ம்.) உண்ணாதிருத்தல் மரபு. உவமை : இல் பொருளுவமை.
|
பூத்த - தோன்றிய. அருந்ததி - ஒரு விண்மீன். கழீஇய - கழுவிய. பின்றை - பின்னர். அயினி - அன்னம. உழுவை - புலி; சீவகனுக்குவமை. தோகை - மயில்; இலக்கணைக்குவமை.
|
( 92 ) |
2470 |
பொன்னங் காழிற் பொலிந்த | |
|
முத்து விதானம் புணர்ந்துதேன் | |
|
மன்னு மாலை பலதாழ்ந்து | |
|
மணப்புகை விம்மி மல்கிய | |
|