பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1394 

2470 வன்னத் தூவி யடர்பஞ்சி
  யவிர்மயி ராதி யாகப்
பன்னிச் சொன்ன பதினைந்தும்
  படுத்தார் பாவை மார்களே.

   (இ - ள்.) பொன் அம் காழின் பொலிந்த முத்து விதானம் புணர்ந்து - அழகிய பொற் காழிலே விளங்கும் முத்தினால் மேற்கட்டி புணர்க்கப்பட்டு; தேன் மன்னும் மாலைபல தாழ்ந்து - தேன் பொருந்திய மாலைகள் பல தாழப்பட்டு; மணப்புகை விம்மி மல்கிய - நறுமணப்புகை மிகுந்து பெருகிய மணவறையிலே; அன்னத் தூவி அடர் பஞ்சி அவிர் மயிர் ஆதி ஆக - அன்னத்தின் தூவியும் நெருங்கிய பஞ்சியும் விளங்கும் மயிரும் முதலாக; பன்னிச் சொன்ன பதினைந்தும் பாவைமார் படுத்தார் - ஆராய்ந்து கூறிய பதினைந்தையும் பாவைமர் பரப்பினார்கள்.

   (வி - ம்.) இது கட்டிலின் சிறப்புக் கூறியது. நச்சினார்க்கினியர் முற் செய்யுளையும் இதனையும் ஒரு தொடராக்கி, இப்படுக்கையிலே இலக்கணையோடு, மயிலுடன் புலி யிருந்தது போலச் சீவகன் இருந்தானெனக் காட்டுவர்.

( 93 )

வேறு

2471 பனிமயிர் குளிர்ப்பன பஞ்சின் மெல்லிய
கனிமயிர் குளிர்ப்பன கண்கொ ளாதன
வெலிமயிர் போர்வைவைத் தெழினி வாங்கினா
ரொலிமயிரிச் சிகழிகை யுருவக் கொம்பனார்.

   (இ - ள்.) ஒலி மயிர்ச் சிகழிகை உருவக் கொம்பனார் - தழைத்த மயிரால் முடிந்த முடியை உடைய அழகிய கொம்பனையார்; பனி மயிர் குளிர்ப்பன - பனித்தலாற் பிறர்க்கு மயிர் குளிர் செய்வன; பஞ்சின் மெல்லிய - பஞ்சினும் மெல்லியன; கனி மயிர் குளிர்ப்பன - நெருப்பின்கண் வேதற்குரிய மயிரை வேகாமற் குளிரச் செய்வன (ஆகிய) ; எலி மயிர்ப் போர்வை வைத்து எழினி வாங்கினார் - எலிமயிர்ப் போர்வையை வைத்து உருவு திரையை வளைத்தனர்.

   (வி - ம்.) பனி - பனித்தல். கனிமயிர் - வேதற்குரிய மயிர். நுண்மையாற் கட்பொறி கதுவமாட்டாதன. எழினி - உருவுதிரை. ஒலிமயிர் : வினைத்தொகை. ஒலித்தல் - தழைத்தல்.

( 94 )
2472 விழுத்தகு மணிச்செவி வெண்பொற் கைவினை
யெழிற்பொலி படியக மிரண்டு பக்கமுந்
தொழிற்பட வைத்தனர் துளும்பு மேகலைக்
கழித்தவே லிரண்டுகண் டனைய கண்ணினார்.