முத்தி இலம்பகம் |
1396 |
|
|
2474 |
பெய்தபொற் செப்பு மாலைப் | |
|
பெருமணிச் செப்புஞ் சுண்ணந் | |
|
தொய்யறப் பெய்த தூநீர்த் | |
|
தொடுகடற் பவளச் செப்பும். | |
|
(இ - ள்.) கை செய்து கமழும் நூறும் - ஒழுங்காக்கி மணக்கும் சுண்ணாம்பும்; காழ்க்கும் வெள்ளிலையும் - காழ்ப்புத்தரும் வெற்றிலையும்; காமம் எய்த நன்கு உணர்ந்த நீரார் - காம வேட்கை இவர்கட்குப் பொருந்த, நன்கறிந்த மகளிர்; இன் முகவாசம் ஊட்டிப் பெய்த பொன் செப்பும் - இனிய முகவாசப் பொருள்களைக் கூட்டி வைத்த பொற் செப்பும்; மாலைப் பெருமணிச் செப்பும் - மாலைகள் வைத்த பெரிய மணியாற் செய்த செப்பும்; சுண்ணம்தொய் அறப் பெய்த தூநீர்த் தொடுகடல் பவளச் செப்பும் - நறுமணப் பொடியைக் குற்றமறப் பெய்த, தூய நீரையுடைய கடலிலே தோன்றிய பவளத்தாற் செய்த செப்பும்;
|
(வி - ம்.) இஃது அடுத்த செய்யுளுடன் தொடர்ந்தது.
|
நூறு - சுண்ணாம்பு. வெள்ளிலை - வெற்றிலை. நீரார் - தன்மையுடையோர். தொய் - குற்றம். தொடுகடல் : வினைத்தொகை.
|
( 97 ) |
2475 |
தாமணி நானச் செப்புஞ் சலஞ்சலக் கலன்பெய் செப்புந் | |
|
தூமணித் துகில்க ளார்ந்த வலம்புரித் துலங்கு செப்புங் | |
|
காமநீர்க் காம வல்லி கவின்கொண்டு வளர்ந்த தேபோ | |
|
னாமவே னெடுங்கட் பாவை நயப்பன வேந்தி னாரே. | |
|
(இ - ள்.) தாமணி நானச் செப்பும் - மாலையணிந்த கத்தூரிச் செப்பும்; சலஞ்சலக் கலன்பெய் செப்பும் - சலஞ்சல வடிவாகச் செய்த அணிகலன் பெய்த செப்பும்; தூமணித் துகில்கள் ஆர்ந்த வலம்புரித் துலங்கு செப்பும் - தூய அழகிய ஆடைகள் நிறைந்த வலம்புரி வடிவாகத் துலங்கும் செப்பும்; காமநீர்க் காமவல்லி கவின்கொண்டு வளர்ந்ததே போல் - காம நீரிலே காமவல்லி அழகு கொண்டு வளர்ந்ததைப் போல; நாமம் வேல் நெடுங்கண் பாவை நயப்பன ஏந்தினார் - அச்சமூட்டும் வேலனைய நீண்ட கண்களையுடைய இலக்கணை விரும்பும் பிறவற்றையும் மகளிர் ஏந்தினர்.
|
(வி - ம்.) தாமம் - தாம் என ஈறு கெட்டது. சலஞ்சலம், வலம்புரி என்பன சங்கின் வகை. காமமாகிய நீர். காமவல்லி - ஒரு பூங்கொடி. கவின் - அழகு. நாமம் - அச்சம். பாவை : இலக்கணை.
|
( 98 ) |