பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1397 

2476 விரிகதி ரார மின்னித்
  தாரெனுந் திருவில் வீசிக்
குரிசின்மா மேகம் பெய்த/span>
  கொழும்புயற் காம மாரி
யரிவைதன் னெஞ்ச மென்னு
  மகன்குள நிறைந்து வாட்கட்
கரியமை சேறு சிந்திக்
  கலிங்குக டிறந்த வன்றே.

   (இ - ள்.) குரிசில் மா மேகம் - சீவகனாகிய பெரிய முகில்; விரிகதிர் ஆரம் மின்னி - விரிந்த ஒளியையுடைய ஆரமாகிய மின்னை மின்னி; தார் எனும் திருவில் வீசி - மாலையாகிய வான வில்லையிட்டு; பெய்த கொழும்புயல் காமமாரி - பெய்த வளமிகு நீரையுடைய காமமாகிய மாரியாலே; அரிவைதன் நெஞ்சம் என்னும் அகன்குளம் நிறைந்து - இலக்கணையின் உள்ளம் என்கிற அகன்ற குளத்திலே நிறைந்து; வாள்கண் கலிங்குகள் கரி அமை சேறு சிந்தி - வாளனைய கண்ணாகிய கலிங்குகள் மையாகிய அமைந்த சேற்றினைச் சிந்தி; திறந்த - திறந்தன.

   (வி - ம்.) என்றது, அவன் விளைத்த காம இன்பம் நிறைதலின், உவமைக் கண்ணீர் வீழ்த்தின என்றவாறு. புயல் - நீர். 'புயலன்றலர் சடை ஏற்றவன்' (சிற் - 240) என்றார்.

( 99 )
2477 தோக்கையந் துகிலி னாடன்
  றுணைமுலை பொருது சேந்த
வேக்கொசி விலாத வில்லா
  னிடுகொடி யகல மின்றேன்
றேக்கிவண் டிமிருங் கோதை
  செல்வன்றா ருழக்க நைந்து
பூக்கொய்து துவண்ட கொம்பின்
  பொற்பின ளாயி னாளே.

   (இ - ள்.) ஏக்கு ஒசிவு இலாத வில்லான் இடுகொடி அகலம் - எய்தற் றொழிலுக்குக் கெடுதலில்லாத வில்லையுடைய சீவகனது கொடி எழுதப்பட்ட மார்பாகிய மலையோடு; தோக்கை அம் துகிலினாள் தன் - கொய்சகமுடைய அழகிய ஆடையினையுடைய இலக்கணையினுடைய; துணைமுலை பொருது சேந்த - முலைகளாகிய யானைகள் முதலில் பொருது சிவந்தன; செல்வன் தார் உழக்க - அது பொறாமல் சீவகனுடைய தார் (தூசிப்படை) பின்பு பொருதலாலே; இன் தேன் தேக்கி வண்டு இமிரு