முத்தி இலம்பகம் |
1399 |
|
|
(இ - ள்.) அவன் சாந்தம் ஆகம் எழுதி - (அப்போது) சீவகன் சந்தனத்தாலே அவள் மார்பிலே எழுதி; சேந்து நீண்ட செழுந்தாமரைக் கண்களின் - சிவந்து நீண்ட தன் செந்தாமரைக் கண்களாலே; ஏந்தி மாண்ட முலைக்கண்களின் எழுதி - நிமிர்ந்து சிறப்புற்ற முலைக்கண்களிலே எழுதி; தகை மாமலர் ஆய்ந்து சூட்டி - தகுதியையுடைய சிறந்த மலர்களைத் தெரிந்தணிந்து; அஞ்சலி செய்தான் - கைகுவித்து அவள் அடியிலே வணங்கினான்.
|
(வி - ம்.) கூட்டத்திற்கு இடையீடு செய்தான் எனக் கருதி அவள் ஊடியதால் அவன் அஞ்சலி செய்தான் ஊடல் தீர்க்க.
|
( 102 ) |
2480 |
மணிசெய் வீணை மழலைக்குழல் பாண்டிலோ | |
|
டணிசெய் கோதை யவர்பாடிய கீதம் | |
|
பணிவில் சாயல் பருகிப்பவ ளக்கொடி | |
|
மணியு முத்துமலர்ந் திட்டதொத் தாளே. | |
|
(இ - ள்.) அணிசெய் கோதையவர் - அழகிய கோதையினை உடையார்; மணி செய் வீணை மழலைக் குழல் பாண்டிலொடு - மணியினாற் செய்த கோட்டையுடைய யாழும்; மழலைக் குழல் - மழலை போன்ற இனிய குழலும்; பாண்டிலொடு - தாளத்துடன்; பாடிய கீதம் - பாடிய பாட்டு; பணிவு இல் சாயல் பருகி - மேம்பட்ட சாயலையுடைய இலக்கணை பருகி; பவளக்கொடி மணியும் முத்தும் மலர்ந்திட்டது ஒத்தாள் - ஒரு பவளக்கொடி மணியையும் முத்தையும் பூத்திட்ட தன்மையை ஒத்தாள்.
|
(வி - ம்.) மணி - பவளம் : வாய்க்குவமை. இவர் பண்டு செய்த நிலைமை தோன்றப் பாடிய பாட்டினாற் சிறிது முறுவல் கொண்டாள் என்றார்; இவ்வாறு பாடுதல் மரபு. பாட்டுக்குப் பரிசில் கொடுத்தாள் என்றாற் போலவும் நின்றது.
|
( 103 ) |
2481 |
எய்த்து நீர்ச்சிலம் பின்குரன் மேகலை | |
|
வித்தி மாதர் வருத்தம்விளைத் தாளெனத் | |
|
தத்து நீர்த்தவ ளைக்குரற் கிண்கிணி | |
|
யுய்த்தொர் பூசலுட னிட்டன வன்றே. | |
|
(இ - ள்.) வித்தி மாதர் வருத்தம் விளைத்தாள் என - காதலை வித்தி இவள் வருத்தம் விளைத்தாள் என்பன போல; எய்த்து உணர்ந்து; நீர்ச் - சிலம்பு - நீர்மையை உடைய சிலம்பும்; இன் குரல் மேகலை - இனிய குரலையுடைய மேகலையும்; நீர் தத்து தவளைக் குரல் கிண்கிணி - நீரிலே தத்தும் தவளையின் குரல் போல் ஒலிக்கும் கிண்கிணியும்; உடன் உய்த்து ஒர் பூசல் இட்டன - ஒன்றாகக் கொண்டு ஒரு பூசலை யிட்டன.
|