| 
பதிகம் | 
14  | 
  | 
| 
 யாகக்கொண்டு துயிலும் அழகிய சாரலைக் கடந்து ; மை நாகவேலி மலிபல்லவ 
தேயம் நண்ணி - முகில் உறங்கும் மலையை வேலியாக உடைய வளமிகு பல்லவ நாட்டை அடைந்து ; 
கொய் நாகச்சோலை கொடி அந்நகர் புக்க ஆறும் - மலர்களைக் கொய்யும் புன்னைமரச் 
சோலையையும் கொடியையுமுடைய அதன் தலைநகராகிய சந்திராபம் என்னும் நகரிலே புகுந்தபடியும் 
 | 
| 
    (வி - ம்.) 
மை - முகில், கொய்ந்நாகம் - புன்னை கொடிமாநகரும் பாடம். காந்தள் வடிவிற்கும் 
நிறத்திற்கும் உவமம். 
 | 
( 12 ) | 
|  18 | 
அத்தம் மனைய களிற்றந்நகர் மன்னன் மங்கை | 
 
 | முத்தம் முரிஞ்சு முகிழ்மென்முலை மின்ன னாளைப் |  
 | 
பைத்தங்கொர் நாகம் பனிமாமதி யென்று தீண்டச் |  
|   | 
சித்தங் 
குழையற் கெனத்தீர்த்தவட் சோர்ந்த வாறும், |  
 
 | 
| 
    (இ - ள்.) 
அத்தம் அனைய களிற்று அந் நகர் மன்னன் மங்கை - அத்தகிரி போன்ற யானையையுடைய , அந்த 
நகர் மன்னனின் மகளாகிய; முத்தம் உரிஞ்சும் முகிழ் மென்முலை மின் அன்னாளை - 
முத்துமாலை அசையும் அரும்பனைய மெல்லிய முலையையுடைய மின்னுக்கொடி போன்ற பதுமையை; 
அங்கு ஓர் நாகம் பைத்து பனி மா மதி என்று தீண்ட - அப் பொழிவிடத்தே ஓர் அரவு படம் 
விரித்துக் குளிர்ந்த பெரிய திங்களென்று (அவள் முகத்தைக் கருதி, அது மறுவுடைய 
திங்களன்மையின் கையிலே) தீண்டுதலால்; சித்தம் குழையற்க எனத்தீர்த்து அவள் சேர்ந்த 
ஆறும் - உளம் (வருந்திய உலோக பாலனை) வருந்தற்க என்று கூறி, (அவளுக்குற்ற நஞ்சினை) 
நீக்கி, அவளை மணந்தபடியும்; 
 | 
| 
    (வி - ம்.) 
அத்தகிரி என்னும் வடமொழிச் சிதைவு விகாரமாயிற்று;  அத்த மென்னும் பொன்னஞ் சிலம்பு  
(பாண்டிக்கோவை) என்றார் பிறரும்.  அங்கு (பைத்து அங்கு ஓர் நாகம்) எனக் கதையை 
உட்கொண்டு சுட்டினார். குழையற்க: விகாரம் (குழையற்க என : குழையற்கென: அகரம் : 
தொகுத்தல் விகாரம்). 
 | 
( 13 ) | 
|  19 | 
பொற்பூண் சுமந்த புணர் மென்முலைக் கோடு போழ | 
 
 | நற்பூங் கழலா னிருதிங்க ணயந்த வாறுங், |  
 | 
கற்பா டழித்த கனமாமணித் தூண்செய் தோளான |  
|   | 
வெற்பூ டறுத்து விரைவின்னெறிக் கொண்ட வாறும், |  
 
 | 
| 
    (இ - ள்.) 
நல்பூங் கழலான் - அழகிய பூவேலை செய்த வீரக்கழல் அணிந்த சீவகன் ; பொன்பூண் சுமந்த 
புணர் மென் முலைக்கோடு போழ - பொற்கலன் ஆகிய கிம்புரியைச் சுமந்த முலையாகிய இரு 
கொம்புகளும் உழ ; இரு திங்கள் நயந்த ஆறும் - 
 |