பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 140 

258 நுண்முத்த மேற்றி யாங்கு
  மெய்யெலாம் வியர்த்து நொய்தின்
வண்முத்த நிரைகொ ணெற்றி
  வார்முரி புருவ மாக்கிக்
கண்ணெரி தவழ வண்கை
  மணிநகு கடக மெற்றா
வெண்ணகை வெகுண்டு நக்குக்
  கட்டியங் காரன் சொன்னான்.

   (இ - ள்.) நுண்முத்தம் ஏற்றியாங்கு மெய்எலாம் நொய்தின் வியர்த்து - நுண்ணிய முத்துக்களைப் பதித்தாற்போல உடலெங்கும் விரைவிலே வியர்த்து; வண்முத்தம் நிரைகொள் நெற்றி வார்முரி புருவம் ஆக்கி - அந்த வியர்வை நிறைத்த நெற்றியிலே நீண்ட வளைந்த புருவத்தை ஏற்றி; கண்எரி தவழ - கண்களில் அனல் பரவ; வண்கை மணிநகு கடகம் எற்றா- வளமிகு கையிலே மணிகள் ஒளிரும் கடகத்தை உடைத்து; வெள்நகை வெகுண்டு நக்கு - வெடி நகைப்பாக வெகுண்டு நகைத்து; கட்டியங்காரன் சொன்னான் - கட்டியங்காரன் உரைத்தான்.

 

   (வி - ம்.) இதன்கண்ணும் கட்டியங்காரன் வெகுளுதற்கும் நகைத்தற்கும் வேண்டிய காரணமில்லாதவிடத்தும் கடுஞ்சினமும் பெருஞ்சிரிப்பும் உடையன் என அவன் பேதைமையை விளக்குதல் அறிக.

 

   வெண்ணகை - வெண்மை காரணமாகப் பிறக்கும் நகை. வெண்மையை வெகுளிக்கும் ஏற்றுக.

( 229 )
259 என்னலாற் பிறர்கள் யாரே
  யின்னவை பொறுக்கு நீரா
ருன்னலாற் பிறர்கள் யாரே
  யுற்றவற் குறாத சூழ்வார்
மன்னன்போய்த் துறக்க மாண்டு
  வானவர்க் கிறைவ னாகப்
பொன்னெலாம் விளைந்து பூமி
   பொலியயான் காப்ப லென்றான்.

   (இ - ள்.) இன்னவை பொறுக்கும் நீரார் என் அலால் பிறர்கள் யார்? - நீ கூறிய இக் கடிய சொற்களைப் பொறுக்கும் இயல்பினார் என்னை அல்லாமல் வேறு யார்?; உற்றவற்கு உறாத சூழ்வார் உன்னலால் பிறர்கள் யார்?- தம்மைச் சார்ந்தவனுக்கு ஒவ்வாத செயல்களைச் சூழ்கின்றவர் உன்னை யொழிய வேறு யார்? (இனி அமைக); மன்னன் துறக்கம் போய் ஆண்டு வானவர்க்கு இறை