முத்தி இலம்பகம் |
1401 |
|
|
சிவலோகம், பரமபதம் என்கிற உலகிலுள்ள அரனும் அரியும் என்றும் கூறலாம். இவர்கள் என்றும் பொன்றா நிறையின்பத்தினைத் தேனுண்ணும் வண்டென முறையுறத் துய்ப்பவராவர். நாலாம் நாள் அரசர்க்கு மயிர்களைதல் முறைமையென்று கூறுதலின் அது கூறுகின்றார்.
|
( 106 ) |
2484 |
உச்சிவரை வளர்ந்திளமை யொழிந்தவுயர் திண்கா | |
|
ழிச்சவிய வல்லவென வெழுதியவை யூன்றிக் | |
|
கச்சுவிளிம் பணிந்ததொழிற் கம்பலவி தான | |
|
நச்சுமணி நாகருறை நாகமென விரித்தார். | |
|
(இ - ள்.) உச்சி வரை வளர்ந்து - மலையுச்சியிலே வளர்ந்து; இளமை ஒழிந்த உயர் திண்காழ் - இளமை நீக்கி முற்றின திண்ணிய காம்புகள்; இச் சவிய அல்ல என எழுதியவை - இப்படி அழகுடையன அல்ல என்னும்படி எழுதினவற்றை; ஊன்றி - நட்டு; கச்சு விளிம்பு அணிந்த தொழில் கம்பல விதானம் - கச்சினாலே விளிம்பை அழகு செய்த தொழிற்பாடுடைய கம்பலமாகிய மேற்கட்டியை; நச்சு மணி நாகர் உறை நாகம் என விரித்தார் - நஞ்சையும் மணியையும் உடைய நாகர்கள் உறைகின்ற உலகம் என்னும்படி விரித்தனர்.
|
(வி - ம்.) வரையுச்சி என மாறுக. இளமை ஒழிந்த என்றது முற்றிய என்றவாறு. காழ் - கழி. சவிய : பலவறி சொல் : அழகுடையன.விதானம் - மேற்கட்டி. நாகம் - நாகருலகம்.
|
( 107 ) |
2485 |
முத்தக நிறைந்தமுளை யெயிற்றுமத யானை | |
|
மத்தகமுந் திருமகடன் வடிவுபட மாதோ | |
|
வொத்தகல மெண்முழமென் றோதிநக ரிழைத்தார் | |
|
மொய்தெரிசெம் பொற்றுகளி னூன்முடிவு கண்டார். | |
|
(இ - ள்.) நூல் முடிவு கண்டார் - நூலின் முடிவைக் கண்டவர்கள்; முத்து அகம் நிறைந்த முளை எயிற்று மதயானை - முத்தைத் தன்னிடத்தே நிறையக் கொண்ட முளை எயிற்றையுடைய மதயானைகளை; மத்தகமும் - மத்தகத்துடன்; (இரு புறத்திலும்) திருமகள் தன் வடிவும்பட - திருமகளின் உருவமும் அமைய; மொய்த்து எரிசெம்பொன் துகளின் - மிகுதியாக ஒளிர்கின்ற பொன் துகளாலே (ஆக்கி); ஒத்த அகலம் எண் முழம் என்று ஓதி - தன்னில் ஒத்த அகலம் எண் முழம் என்று ஆராய்ந்து; நகர் இழைத்தார் - மனையைக் கோலஞ்செய்தார்.
|
(வி - ம்.) இருபுறத்தும் மதயானைகளை நிற்ப இடையே திருமகளுருவம் அமையக் கோலஞ் செய்தார் என்க. ”முதிரிண ரூழ்கொண்ட முழவுத்தா ளெரிவேங்கை, வரிநுதல் எழில்வேழம் பூ நீர்மேற் சொரிதர, புரிநெகிழ் தாமரை மலரங்கண் வீறெய்தித், திருநயந் திருந்தன்ன, ” என்றார் கலியினும் (44 : 4 - 7)
|
( 108 ) |