பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1403 

   (இ - ள்.) வடகீழ் இருவர் - வடகீழ்த் திசையிலே இருவர்; மின்போல் வெள் உருவமாலை ஒள் உருவ வாள் உருவி நின்றனர் - மின்னுக் கொடிபோல வெள்ளிய வடிவையுடைய மாலையணிந்து, ஒள்ளிய வடிவுடைய வாளை உருவியவாறு நின்றனர்; தென்மேல் பால் - தென் மேற்றிசையிலே; கள் உருவ மாலையவர் - கள்ளை உடைய அழகிய மாலையையுடைய மகளிர்; உயர் உழுந்து அகலும் ஏந்தி - உயர்ந்த உழுந்தையுடைய அகலையும் ஏந்தி; உள் உருக நோக்கி - அன்பினால் நெஞ்சு குழையத் தெய்வத்தை நோக்கி; கைதொழுதுநின்றார் - கைகுவித்து நின்றார்.

   (வி - ம்.) வடகீழ் - வடகீழ்த்திசை. தென்மேல் - தென்மேற்றிசை. அன்பினால் உள்ளுருக என்க; தெய்வத்தை நோக்கி என்க. உழுத்தகல் - உழுந்து பெய்த அகல்.

( 111 )
2489 தோரைமலர் நீரறுகு துளும்புமணித் தால
மாரவட மேற்றிசைக்க ணிருந்தவலிர் பஞ்சிச்
சீர்நிறைய வரையகலந் திருத்தத்திரு நோக்கும்
வாரமுறைக் கருவிவடக் கிருந்தனகண் மாதோ.

   (இ - ள்.) தோரை மலர் நீர் அறுகு துளும்பும் மணித்தாலம் - மூங்கில் அரிசியும் மலரும் நீரும் அறுகும் மணித் தட்டிகன்கண்; வடமேல் திசைக்கண் ஆர இருந்த - வடமேல் திசையிலே பொருந்த இருந்தன; வரை அகலம் சீர் நிறையத் திருத்த வாரமுறை திருநோக்கும் - மலையனைய மார்பைச் சீர் முற்றுறத் திருத்த, பட்ச பாத முறையாகத் திருமகள் நோக்குகிற; அவிர் பஞ்சி வடக்கிருந்தன - விளங்கும் வெள்ளாடையின் மேலே வடக்கிலே இருந்தன.

   (வி - ம்.) இருந்தன கள் : கள் : அசை. பஞ்சி : வெண்டுகிலுக்குக் கருவியாகுபெயர். 'உறை கருவி' பாடமாயின் 'வாரம் உறைகின்ற கருவி' என்க.

   தோரை - மூங்கிலரிசி. மணித்தாலம் - மணியாலியன்ற தாலம் (தட்டு) இதனைத் தாம்பாளம் என்பர். இருந்த : பலவறிசொல். வாரம் - நடுவின்மை.

( 112 )
2490 பானுரையி னெய்யவணைப் பைங்கதிர்கள் சிந்தித்
தானிரவி திங்களொடு சார்ந்திருந்த தேபோல்
வேனிரைச்செய் கண்ணியொடு மெல்லென விருந்தான்
வானுயர வோங்குகுடை மன்னர்பெரு மானே.

   (இ - ள்.) பால் நுரையின் நொய்ய அணை - பாலின் நுரை போல நொய்ய அணையிலே; இரவி தான் திங்களொடு பைங்கதிர்கள் சிந்திச் சார்ந்திருந்ததே போல் - ஞாயிறு தான் திங்க