| முத்தி இலம்பகம் |
1405 |
|
|
| 2492 |
வேந்தன் றன்னாற் களிற்றூர் | |
| |
சிறப்பொடு மேயினான் | |
| |
வாய்ந்த கோல முடையான் | |
| |
பெருமஞ்சிகர்க் கேறனான். | |
|
|
(இ - ள்.) ஆய்ந்த கேள்வி யவன் வழிகான் முளையாய் - சிறந்த கேள்வியை உடைய அம் முனிவன் மரபிலே பிள்ளையாக; தோன்றினான் - பிறந்தவன்; தோய்ந்த கேள்வித் துறைபோய் - தொக்க நுற்கேள்வி முற்றக் கற்று; அலங்காரமும் தோற்றினான் - அலங்காரம் என்பதொரு நூலையுங் கற்றவன்; வேந்தன் தன்னால் களிற்று ஊர்தி சிறப்பொடு மேயினான் - அரசனாலே யானையாகிய ஊர்தியையும் சிறப்பொடு பெற்றவன்; வாய்ந்த கோலம் உடையான் - பொருந்திய அழகுடையவன்; பெருமஞ்சிகர்க்கு ஏறனான் - (தன்தொழில் மிகுதியால்) பெரிய நாவிதர்களிற் சிங்கம் போன்றவன்.
|
|
(வி - ம்.) அடுத்த செய்யுளுடன் தொடரும்.
|
|
ஆய்ந்த கேள்வியவன் என்றது சாபத்தால் நாவிதனாயினான் என்ற அம் முனிவன் என்பதுபட நின்றது. கான்முளை - வழித்தோன்றல் - பிள்ளை. கல்வி கேள்விகளிற் றுறைபோய் என்க. அலங்காரம் - ஒரு நூல். அலங்காரம் என்னும் ஒரு நூலையுஞ் செய்தான். அதனாற் வேந்தனாற் சிறப்பொடு மேயினான் எனினுமாம். கோலம் - அழகு. மஞ்சிகர் - நாவிதர்.
|
( 115 ) |
வேறு
|
| 2493 |
நித்தில வடமும் பூணு | |
| |
மாரமு நிழன்று தாழ | |
| |
வொத்தொளிர் குழைகள் காதி | |
| |
னான்றுபொன் னூச லாடப் | |
| |
பைத்தர வல்குற் பாவை | |
| |
கரகநீர் சொரியப் பாங்கின் | |
| |
வித்தகன் பூசி வெள்வேல் | |
| |
வேந்தனுக் கிறைஞ்சி னானே. | |
|
|
(இ - ள்.) நித்தில வடமும் பூணும் ஆரமும் நிழன்று தாழ - முத்துமாலையும் பூண்களும் மாலையும் ஒளிவீசித் தொங்க; ஒத்து ஒளிர் குழைகள் காதில் நான்று பொன் ஊசல் ஆட - அளவு ஒத்து விளங்கும் குழைகள் காதிலே தொங்கிப் பொன்னூசலாட; பைத்து அரவு அல்குல் பாவை - படமுடைய அரவனைய அல்குலாள் ஒரு பாவையாள்; கரக நீர் சொரிய - கரகத்திலிருந்து நீரை வார்க்க; வித்தகன் பாங்கின்பூசி - அறிஞனாகிய
|