பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1406 

அவன் பண்புற வாய்கழுவி; வெள்வேல் வேந்தனுக்கு இறைஞ்சினான் - வெள்ளிய வேலையேந்திய அரசனை வணங்கினான்.

   (வி - ம்.) வேந்தனுக்கு : வேந்தனை : உருபுமயக்கம்.

   நித்திலவடம் - முத்துவடம். நிழன்று - ஒளிர்ந்து. பைத்து - படத்தையுடைய : பாவை என்றது ஒரு பெண் என்பதுபட நின்றது. வித்தகன் என்றது - நாவிதனை. பூசி - வாய்பூசி.

( 116 )
2494 நச்செயிற் றரவி னோக்கின்
  யொளிமுடிச் சிதறி னானே.
வச்சிர வண்ணன் காப்ப
  மன்னரை நடுங்க நோக்கி
வச்சுதங் கொண்டு மன்ன
  வாழிய ரூழி யென்னா
யுச்சிவண் டிமிரு மாலை
  னடிமுடித் தெளித்து நங்கை

   (இ - ள்.) நஞ்சு எயிற்று அரவின் நோக்கின் மன்னரை நடுங்க நோக்கி - நஞ்சையுடைய பாம்பின் பார்வையைப்போல உன் பகை வேந்தரை நடுங்கும்படி பார்த்து; வச்சிர வண்ணன் காப்ப ஊழி வாழியர் என்னா - குபேரன் காக்க ஊழி காலம் வாழ்க என்று; அச்சுதம் கொண்டு மன்னன் அடிமுடித் தெளித்து - அறுகையும் அரிசியையுங் கொண்டு வேந்தனுடைய அடியிலும் முடியிலுந் தெளித்து; நங்கை வண்டு இமிரும் மாலை ஒளிமுடி உச்சிச் சிதறினான் - (அவற்றை) இலக்கணையின், வண்டுகள் முரலும் மாலையணிந்த ஒளியுறும் முடியின் உச்சியிலே தெளித்தான்.

   (வி - ம்.) செல்வமுண்டாதற்கு வைச்சிர வண்ணனைக் கூறினான்.

   ”நச்செயிற்று ........ ஊழி” என்னுமளவும் நாவிதன் வாழ்த்தியது. வைச்சிரவணன் என்பது வச்சிரவண்ணன் எனப்பட்டது. அவன், குபேரன். அச்சுதன் - அரிசி. அடிமுடி - அடியினும் முடியினும். நங்கை : இலக்கணை.

( 117 )
2495 வாக்கினிற் செய்த பொன்வாண்
  மங்கல விதியி னேந்தி
யாக்கிய மூர்த்தத் தண்ணல்
  வலக்கவு ளுறுத்தி யார்ந்த
தேக்கணின் னகிலி னாவி
  தேக்கிடுங் குழலி னாளை
நோக்கல னுனித்து நொய்தா
  விடக்கவு ளுறுத்தி னானே.