பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1407 

   (இ - ள்.) வாக்கினில் செய்த பொன்வாள் - (நூல் விதியுடன்) வாக்குண்டாகப் பொன்னாற் செய்த கத்தியை; மங்கல விதியின் ஏந்தி - மங்கல விதிப்படி எடுத்து; ஆக்கிய மூர்த்தத்து அண்ணல் வலக்கவுள் உறுத்தி - அமைத்த முகூர்த்தத்திலே அண்ணலின் வலப்பக்கக் கவுகளிலே தொட்டு; தேன்கண் இன் அகிலின் ஆவி - தேன் கலந்த இனிய அகிற்புகை; தேக்கிடும் குழலினாளை - தங்கியு கூந்தலுடையாளை; நுனித்து நோக்கலன் - கூர்ந்து பார்க்காதவனாய்ச் (சிறிது பார்த்து); இடக்கவுள் நொய்தா உறுத்தினான் - இடக்கவுளிலே சிறிது தொட்டான்.

   (வி - ம்.) ஆடவர்க்கு வலக்கவுளினும் மகளிர்க்கு இடக்கவுளினும் உறுத்துதல் மரபு. ”மின்வாள் அழித்த மேதகு கைவினைப் பொன்வாள் பற்றிப்பன்மாண் பொலிகென வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி” என்றார் பெருங் கதையினும் (2 - 4 : 161 - 3).

( 118 )
2496 ஆய்ந்தபொன் வாளை நீக்கி
  யவிர்மதிப் பாகக் கன்மேற்
காய்ந்தவாள் கலப்பத் தேய்த்துப்
  பூநிறீஇக் காமர் பொன்ஞாண்
டோய்ந்ததன் குறங்கில் வைத்துத்
  துகிலினிற் றுடைத்துத் தூய்தா
வாய்ந்தகைப் புரட்டி மாதோ
  மருடகப் பற்றி னானே.

   (இ - ள்.) ஆய்ந்த பொன் வாளை நீக்கி - (உறுத்தின) பொற் கத்தியைப் போக்கி; காய்ந்த வாள் - (இரும்பும் எஃகும் ஒரு தன்மையாகக்) காய்ந்த மயிர்க்கத்தியை; அவிர் மதிப்பாகக் கல்மேல் கலப்பத் தேய்த்து - விளங்கும் அரைத் திங்கள்போலுங் கல்லின் மேல் நன்றாகத் தீட்டி; பூ நிறீஇ - பூவை அக் கல்லிலே நிறுத்தி; காமர் பொன்ஞாண் தோய்ந்த தன் குறங்கில் வைத்து - அழகிய பொன் கயிறு பொருந்திய தன் துடையிலே வைத்து; துகிலினில் துடைத்து - துகிலிலே துடைத்து; வாய்ந்த கை தூய் தாப் புரட்டி - பொருந்திய கையிலே தூய்தாகப் புரட்டி; மருள்தகப் பற்றினான் - உற்றது தெரியாமல் முகத்தைத் தீண்டினான்.

   (வி - ம்.) 'பூவை நிறுத்தியிட்டு' என்ப - குனிதலின் 'பொன்நாண் தோய்ந்த குறங்' கென்றார். மாது ஓ : அசைகள்.

இச் செய்யுளோடு

”பொன் வாள் பற்றிப் பன்மாண் பொலிகென
வலப்பாற் சென்னி வகைபெறத் தீட்டி
இலக்கணம் பிழையா எஃகமை இருப்பின்
நீரளந்தூட்டிய நிறையமை வாளினைப்