முத்தி இலம்பகம் |
1409 |
|
|
2499 |
உருவச் செங்கய லொண்ணிறப் புள்வெரீஇ | |
|
யிரிய லுற்றன போன்றிணைக் கண்மலர் | |
|
வெருவி யோட விசும்பிற குலாவிய | |
|
திருவிற் போற்புரு வங்க டிருத்தினான். | |
|
(இ - ள்.) ஒள் நிறப் புள் - ஒள்ளிய நிறமுடைய சிச்சிலிப் பறவைக்கு; உருவச் செங்கயல் வெரீஇ - அழகிய செங்கயல்கள் அஞ்சி; இரியல் உற்றன போன்று - ஓடுக்கலுற்றன போல; இணைக் கண்மலர் வெருவி ஓட - இரண்டு கண்மலர்களும் அஞ்சி ஓட; விசும்பின் குலாவிய திருவில்போல - வானில் வளைத்த வானவில் போல; புருவங்கள் திருத்தினான் - புருவங்களைத் திருத்தினான்
|
(வி - ம்.) 'கண்கள் அஞ்சி பார்க்க வானில் வளைத்த திருவில்' என்பர் நச்சினார்க்கினியர். அவன் புருவந் திருத்தினபோது கண்கள் அஞ்சின என்றவே தக்கது.
|
( 122 ) |
2500 |
ஆர மின்ன வருங்குயந் தான்களைந் | |
|
தோரு மொண்டிறற் கத்தரி கைத்தொழி | |
|
னீரிற் செய்தடி யேத்துபு நீங்கினான் | |
|
றாரன் மாலைத் தயங்கிணர்க் கண்ணியான். | |
|
(இ - ள்.) தாரன மாலைத் தயங்கு இணாக் கண்ணியான் - தாரணிந்தவனும் மாலையாக விளங்கும், பூங்கொத்துக் கலந்த கண்ணியனும் ஆகிய நாவிதன்; ஆரம் மினன அருங்குளம்தான் களைந்து - மாலை ஒளிர, அரிய மயிர்க் கத்தியை நீக்கி ஒண்திறல் கத்தரிகைத் தொழில் நீரின் செய்து - ஒள்ளிய திறலையுடைய கத்தரிகையாற் செய்யுந் தொழிலை ஒழுங்குறச் செய்து; அடி ஏத்துபு நீங்கினான் அடியை வணங்கிச் சென்றான
|
(வி - ம்.) குயம் - ஈண்டு மயிர்க்கத்தி. ஓரும் : அசை. கத்தரிகையாற் செய்யும் தொழில் என்க. நீரின் - நீர்மையால். ஏத்துபு - ஏத்தி; தொழுது. கண்ணியான் - நாவிதன்.
|
( 123 ) |
வேறு
|
2501 |
அன்னப் பெடைநடுக்கி யசைந்து | |
|
தேற்றா நடையாளு | |
|
மன்னர் குடைநடுக்கும் மாலை | |
|
வெள்வேன் மறவோனு | |
|
மின்னு மணிக்குடத்தின் வேந்த | |
|
ரேந்தப் புனலாடிப் | |
|
பொன்னங் கடிமலருந் துகிலுஞ் | |
|
சாந்தும் புனைந்தாரே. | |
|