நாமகள் இலம்பகம் |
141 |
|
வன் ஆக - வேந்தன் வானுலகு சென்று ஆண்டு வானவர்களுக்குத் தலைவன் ஆக; பூமிஎலாம் விளைந்து பொன் பொலிய யான் காப்பல் என்றான் - நிலமெங்கும் விளைந்து பொன் சிறக்க யான் காப்பேன் என்றான்.
|
|
(வி - ம்.) 'உற்றவன்- சச்சந்தன் என்றும், உறாத - பொன்னுல காளாமல் மண்ணுலகாளுதல்' என்றும் நச்சினார்க்கினியர் கூறியவை மிகவும் நுணுக்கமுடையன. இனி, உற்றவன் கட்டியங்காரனுமாம். விளைந்த பூமி என்றும் பாடம்.
|
( 230 ) |
260 |
விளைக பொலிக வஃதே |
|
யுரைத்திலம் வெகுள வேண்டா |
|
களைக மெழுக மின்னே |
|
காவலற் கூற்றங் கொல்லும் |
|
வளைகய மடந்தை கொல்லும் |
|
தான்செய்த பிழைப்புக் கொல்லு |
|
மளவறு நிதியங் கொல்லு |
|
மருள்கொல்லு மமைக வென்றான். |
|
(இ - ள்.) விளைக பொலிக அஃதே உரைத்திலம் - நீ கூறியவாறே நிலமெல்லாம் விளைக! பொன்னும் விளங்குக ! நினது நினைவையே கூறிலேம்; வெகுள வேண்டா - அதற்கு நீ சீற்றமுற வேண்டா; இன்னே; களைகம் எழுகம் - இப்போதே களைவதற்கு எழுவோம்; காவலன் கொல்லும் - வளைகள் நிறைந்த பொய்கையுடைய நிலமகளாய்க் கொல்லும்; தான் செய்த பிழைப்புக் கொல்லும் - அரசன் செய்த தவறாகிக் கொல்லும்; அளவு அறுநிதியம் கொல்லும் - எல்லையற்ற செல்வமாய்க் கொல்லும்; அருள் கொல்லும் - அருளாய்க் கொல்லும்; (ஆதலால்); அமைக என்றான் - அரசனுக்கு அக்கொலை பொருந்துவதாக என்றான்.
|
|
(வி - ம்.) இனி, 'அஃதேல் உரைக்கிலம்' என்பது பாடமாயின், 'நின் கருத்து அதுவாயின், வேறு கூறுகின்றிலேம்' என்க. இனி, கூற்றமும் கயமடந்தை முதலியனவும் காவலனாகிய கட்டியங்காரனைக் கொல்லுமென்று உட்கொண்டு [மனத்தில் அமைத்து] 'இனிவார்த்தையமைக' என்றான் என்பாருமுளர். 'விளைக பொலிக' ஒரு வழக்கென்பாருமுளர்.
|
( 231 ) |
261 |
நிலத்தலைத் திருவ னாட |
|
னீப்பருங் காதல் கூர |
|
முலைத்தலைப் போக மூழ்கி |
|
முகிழ்நிலா முடிகொள் சென்னி |
|