முத்தி இலம்பகம் |
1411 |
|
|
2503 |
சுடுமண் மிசைமாரி சொரியச் | |
|
சூழ்ந்து சுமந்தெழுந்து | |
|
நெடுநன் னிமிராவி நாறு | |
|
நெய்தோய் தளிர்மேனி | |
|
துடிநுண் ணிடைப்பெருந்தோட் டுவர்வா | |
|
யேழை மலர்மார்பன் | |
|
கடிநன் மலர்ப்பள்ளி களிப்பக் | |
|
காமக் கடலாழ்ந்தான். | |
|
(இ - ள்.) மாரி சுமந்து எழுந்து சூழ்ந்து சுடுமண் மிசை சொரிய - மாரி நீரைச் சுமந்து எழுந்து உலகை வலமாக வந்து வெங்கார் மண்ணிலே சொரிய; நிமிர் நெடுநல் ஆவி நாறும் - எழுகின்ற மிகுந்த நறிய ஆவிபோல நாறுகின்ற; நெய்தோய் தளிர் மேனி - நெய்யில் முழுகிய தளிர்போலும் மேனியையும்; துடி நுண் இடை - துடிபோலும் நுண்ணிய இடையையும்; பெருந்தோள் - பெரிய தோளையும்; துவர்வாய் - சிவந்த வாயையும் உடைய; ஏழை - இலக்கணை; கடிநல் மலர்ப் பள்ளி களிப்ப - மணமுடைய அழகிய மலரணையிலே களிக்கும்படி; மலர் மார்பன் காமக் கடல் ஆழ்ந்தான் - விரிந்த மார்பன் காமக் கடலிலே முழுகினான்.
|
(வி - ம்.) 'எழுந்த' என்றும் பாடம்.
|
சுடுமண் - ஞாயிற்றின் வெப்பத்தால் நன்கு சுடப்பட்ட மண். இதனை வெங்கார்மண் என்பது இன்றும் வழக்கிலுளது. வெங்கார் மண்ணிலே ஞெரேலென மழைபொழியுங்கால் ஓர் ஆவி தோன்றி மணப்பது இயல்பு. இம்மணம் சிறந்த மகளிர் மேனி மணத்திற்கு உவமை. துடி - உடுக்கை. துவர் - பவளம். ஏழை; இலக்கணை. மார்பன் : சீவகன்
|
( 126 ) |
வேறு
|
2504 |
வழக்கு தாரவன் மார்பிடை மட்டுகப் | |
|
புழுங்கு கோதைபொற் பின்றிறம் பேசலாம் | |
|
விழுங்கு மேகம் விடாது தழீஇக்கிடந் | |
|
தொழிந்த மின்னுக் கொடியொத் தொழிந்திட்டாள். | |
|
(இ - ள்.) வழங்கு தாரவன் மார்பிடை - உலகம் புகழுந் தாரணிந்த சீவகனின் மார்பிலே (தங்கிய); மட்டு உகப் புழுங்கு கோதை - மட்டைச் சிந்துதற்குப் புழுங்குங் கோதை போல்வாளுடைய; பொற்பின் திறம் பேசலாம் - அழகின் கூற்றைச் சிறிது உவமை கூறலாம்; விழுங்கும் மேகம் விடாது தழீஇக் கிடந்து - தன்னை உள்ளடக்குதற்குரிய முகிலை உள்ளடக்கி
|