முத்தி இலம்பகம் |
1412 |
|
|
மாட்டாமல் புறத்தே தழுவிக் கிடத்தலாலே; ஒழிந்த மின்னுக் கொடி ஒத்து ஒழிந்திட்டாள் - பழைய தன்மையை ஒழிந்ததொரு மின்னையொத்துத் தங்கினாள்.
|
(வி - ம்.) உலகம் கொண்டாடப்படுதலின் 'வழங்கு தாரவன்' என்றார். மட்டு உகாநிற்கவும் பின்னரும் மட்டையுகுத்தற்குப் புழுங்குவதொரு கோதை என இக் கோதைக்குச் சிறப்புக் கூறினார். புழுக்கம் வேட்கையால் தோன்றும் என்க.
|
( 127 ) |
2505 |
தாம மார்பனுந் தையலு மெய்யுணர் | |
|
வாமி தென்றறி யாது களித்தவர் | |
|
தூமங் கொப்புளிக் குந்துகிற் சேக்கைமேற் | |
|
காம னப்பணைக் கள்ளுக வைகினார். | |
|
(இ - ள்.) தாம மார்பனும் தையலும் - சீவகனும் இலக்கணையும்; மெய்யுணர்வு ஆம் இது என்று அறியாது - தம் உடம்பினை உணரும் உணர்வாம் இது என்று அறியாமல்; களித்தவர் - (ஒருவர் உடம்பில் ஒருவர் உடம்பு மயங்கிக்) களித்தவர்கள்; தூமம் கொப்பளிக்கும் துகில் சேக்கைமேல் - நறுமணப் புகையை உமிழும் துகில் விரித்த அணைமிசை; காமன் அம்பு அணைகள் உக வைகினார் - காமனுடைய அம்பாலாகிய அணையிலே தேன்சிந்த அமர்ந்தனர்.
|
(வி - ம்.) மார்பன் : சீவகன். தையல் : இலக்கணை : மெய்யுணர்வு - தம்மூடம்பு என்று உணரும் உணர்ச்சி. மெய்யுணர்வாமிது என்றறியாது என்றது, மெய்மறந்து என்றவாறு. தூமம் - நறுமணப்புகை, சேக்கை - படுக்கை. அப்பணை - அம்பாகிய அணை. காமன் அம்பு - மலரம்பு.
|
( 128 ) |
வேறு
|
2506 |
மாதர்தன் வனப்பு நோக்கி | |
|
மகிழ்ந்துகண் ணிமைத்தல் செல்லான் | |
|
காதலித் திருப்பக் கண்கள் | |
|
கரிந்துநீர் வரக்கண் டம்ம | |
|
பேதைமை பிறரை யுள்ளி | |
|
யழுபவர்ச் சோ்த வென்றாள் | |
|
வேதனை பெருகி வேற்கண் | |
|
டீயுமிழ்ந் திட்ட வன்றே. | |
|
(இ - ள்.) மாதர்தன் வனப்பு நோக்கி மகிழ்ந்து - இலக்கணையின் அழகை நோக்கிக் களித்து; கண் இமைத்தல் செல்லான் - கண்களை இமையாதவனாகி; காதலித்திருப்ப - காதலித்திருத்தலால்; கண்கள் கரிந்து நீர்வரக் கண்டு - அவன் கண்கள் கரிந்து
|