பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1413 

நீர்வர, அதனைக் கண்டு; அம்ம! - கேட்பையாக!; பிறரை உள்ளி அழுபவர்ச் சேர்தல் பேதைமை என்றாள் - பிறரை நினைத்தழுபவரைக் கூடுதல் அறியாமை என்றாள்; வேதனை பெருகி வேற்கண் தீ உமிழ்ந்திட்ட. அவ்வளவிலே வருத்தம் மிகுதலின் வேலனைய கண்கள் தீயைச் சொரிந்தன.

   (வி - ம்.) வனப்பு நோக்கிக் கண் கரிந்தது; ஆக்கம் பற்றிப் பிறந்த மருட்கை (தொல். மெய்ப். 7. பேர்) என்னும் மெய்ப்பாடு; மருட்கை என்பது வியப்பு.

( 129 )
2507 நாறுசாந் தழித்து மாலை
  பரிந்துநன் கலன்கள் சிந்திச்
சீறுபு செம்பொ னாழி
  மணிவிர னெரித்து விம்மா
வேறியு மிழிந்து மூழுழ்
  புருவங்கண் முரிய நொந்து
தேறுநீர் பூத்த செந்தா
  மரைமுகம் வியர்த்து நின்றாள்.

   (இ - ள்.) சீறுபு - (ஆகவே) சீற்றங் கொண்டு; நாறு சாந்து அழித்து - மணக்கும் சாந்தைத் திமிர்ந்து போக்கி; மாலைபரிந்து - மாலைகளை அறுத்து; நன்கலன்கள் சிந்தி - அழகிய அணிகளைச் சிந்தி; செம்பொன் ஆழி மணிவிரல் நெரித்து - பொன்ஆழி புனைந்த அழகிய விரல்களை நெரித்து; விம்மா - விம்மி; புருவங்கள் ஊழ் ஊழ் ஏறியும் இழிந்தும் முரிய - புருவங்கள் முறைமுறையே ஏறியும் இறங்கியும் முரியும்படி; நொந்து - வருந்தி; தேறுநீர் பூத்த செந்தாமரை முகம் வியர்த்து நின்றாள் - தெளிந்த நீர் துளித்த செந்தாமரை மலர் போன்று முகம் வியர்த்து நின்றாள்.

   (வி - ம்.) நாறுசாந்து : வினைத்தொகை. பரிந்து - அறுத்து. சீறுபு - சீறி. விம்மா - விம்மி. ஊழூழ் - முறைமுறையே. முரிய - வளைய வியர்த்த முகத்திற்கு நீர் துளிக்கப்பட்ட தாமரை மலர் உவமை.

( 130 )
2508 இற்றதென் னாவி யென்னா
  வெரிமணி யிமைக்கும் பஞ்சிச்
சிற்றடிப் போது புல்லித்
  திருமகன் கிடப்பச் சேந்து
பொற்றதா மரையிற் போந்து
  கருமுத்தம் பொழிப் வேபோ
லுற்றுமை கலந்து கண்கள்
  வெம்பணி யுகுத்த வன்றே.