முத்தி இலம்பகம் |
1415 |
|
|
நங்கை வரம்தர மொழிமின் என்றான் - இந் நங்கை வரமளிக்கக் கூறுமின் என்றான்.
|
(வி - ம்.) 'நின்னை விடாமற் பார்த்தலாற் கண் கரிந்து நீர் பெருகியது' என்றுரைத்தும், அவளுக்குச், 'சிதைவு பிறர்க்கின்மை' என்னும் மெய்ப்பாடு பிறத்தலின், விடை கொடாமல் நின்றாள், எனவே, அவன் வண்டுகளையும் தேன்களையும் விளித்துக் கூறினான்.
|
'சிதைவு பிறர்க்கின்மை' யாவது : புணரக் கருதி உள்ளஞ் சிதைந்து நிறையழிந்துழிப் புறத்தார்க்குப் புலனாகாமை நெஞ்சினை நிறுத்தல்; பிறர்க்கின்மை யெனவே தலைவன் உணரும். இது கற்பிற்கும் உரித்தென்றார். இம்மெய்ப்பாடு இவட்கு நிகழ்ந்தமை தான் உணர்ந்து, இடையில் வந்த புள்ளை நோக்கி, 'இனி நுமக்கு எளிது, நீர்ஊடல் தீர்ப்பீராக' என்றான் : ஊடற்குக் காரணம் இன்றியும் இத்துணை யெல்லாம் நிகழ்ந்ததற்கு வருந்தினான் ஆதலின்.
|
( 132 ) |
2510 |
பூவையுங் கிளியுங் கேட்டுப் | |
|
புழைமுகம் வைத்து நோக்கிக் | |
|
காவலன் மடந்தை யுள்ளங் | |
|
கற்கொலோ விரும்பு கொல்லோ | |
|
சாவம்யா முருகி யொன்றுந் | |
|
தவறில னருளு நங்கை | |
|
பாவையென் றிரத்து மென்ற | |
|
பறவைக டம்முட் டாமே. | |
|
(இ - ள்.) பூவையும் கிளியும் கேட்டு - (அவன் வருத்தத்தைப்) பூவையும் கிள்ளையும் கேட்டு; புழைமுகம் வைத்து நோக்கி - கூட்டின் வாயிலிலே முகத்தை வைத்துப் பார்த்து; தம்முள் தாம் - தம்மிற்றாம்; காவலன் மடந்தை உள்ளம் கல் கொல்லோ? இரும்பு கொல்லோ? - இவ்வரசனின் தேவி மனம் கல்லோ? இரும்போ?; யாம் உருகிச் சாவம் - யாமெனின் இவ்வாறு வேண்டி ஊடல் தீர்ப்பின் தகாதென்று கருதி மனமுருகி இறந்துபடுவோம்; நங்கை! பாவை! ஒன்றும் தவறிலன் அருள் - நங்கையே! பாவையே! சிறிதும் தவறு இலன் அருள்வாய்; என்று இரத்தும் என்ற - என்று வேண்டுவோம் என்றன.
|
(வி - ம்.) அவள் ஊடல் தீரக் கருதிய தன்மையை அவை தெளியாமையின், இவன் இறந்து படும் எனக்கருதி இங்ஙனம் கூறின.
|
( 133 ) |
2511 |
பெற்றகூ ழுண்டு நாளும் | |
|
பிணியழந் திருத்தும் பேதாய் | |
|
முற்றிமை சொல்லி னங்கை | |
|
மூன்றுநா ளடிசில் காட்டாள் | |
|
பொற்றொடி தத்தை யீரே | |
|
பொத்துநும் வாயை யென்றே | |
|
கற்பித்தார் பூவை யார்தங் | |
|
காரணக் கிளவி தம்மால், | |
|