பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1417 

   பரத்தையர் தம்மியல்பு கெட்டுப் பொருள் வேட்கையால் அதன் தன்மையராவர் ஆதலின், 'ஆம்' என்றார். அக் கோதையை உபாயத்தால் நெகிழ்த்துத் தேனை வாங்குதல் போலப் பரத்தையரையும் பொருளால் மனம் நெகிழ்த்து இன்பங் கோடல் வேண்டும். பெண்டிரை : ஐ : அசை. கெட - பொல்லாராக.

( 135 )
2513 ஈன்றதா யானு மாக
  விதனைக்கண் டுயிரை வாழே
னான்றியான் சாவ லென்றே
  நலக்கிளி நூலின் யாப்ப
மான்றவண் மருண்டு நக்காள்
  வாழிய வரம்பெற் றேனென்
றான்றவ னாரப் புல்லி
  யணிநலம் பரவி னானே.

   (இ - ள்.) யானும் ஈன்ற தாயாக - யானும் இவளைப் பெற்ற கொடிய தாயாகும்படி; இதனைக் கண்டு உயிரை வாழேன் - இவளுக்குண்டாம் பழியைக் கண்டு உயிரைச் சுமந்து வாழேன்; யான் நான்று சாவல் - நான் சுருக்கிட்டுக் கொண்டு இறந்து படுவேன்; என்று - என்று கூறி; நலக்கிளி நூலின் யாப்ப - அழகிய கிளி நூலாலே கழுத்தைக் கட்டிக்கொள்ள; மான்றவள் மருண்டு நக்கான் - மயங்கிய இலக்கணை மருண்டு நகைத்தாள்; அவன் வாழிய வரம்பெற்றேன் என்று - (அதுகண்ட) அவன், 'கிளி வாழிய! வரம்பெற்றேன்' என்று கூறி; ஆன்று புல்லி அணிநலம் பரவினான் - அமைந்து தழுவி அழகிய நலத்தைப் பாராட்டினான்.

   (வி - ம்.) யானும் : இவட்குப் பிள்ளையாகிய யானும், இதனை - இவன் இறந்தால் இவட்கு உளதாகும் பழியை.

   வாழிய என்றது கிளியை : இங்ஙனங் கொடியவளைப் பெற்றதால் இவளுடைய தாய் கொடியவளானாள்.

( 136 )
2514 நிறையோத நீர்நின்று நீடவமே
  செய்யினும் வாழி நீல
மறையோ விரிவை வரிநெடுங்க
  ணொக்கிலையால் வாழி நீலங்
கண்ணொவ்வா யேனுங்
  களித்து நகுதிநின்
வண்ண மிதுவோ மதுவுண்பார்
  சேரியையோ வாழி நீலம்.