பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1418 

   (இ - ள்.) நீலம்! - நீலமே!; நிறை ஓத நீர் நின்று நீள் தவமே செய்யினும் - நிறைந்த கடல் நீரிலே (ஒரு காலால்) நின்று நீண்ட காலம் தவமே செய்தாலும்; அரிவைகண் ஒக்கிலை நீலம்! - இவள் கண்ணை ஒவ்வாமல் நின்றாய்! நீலமே!; அறையோ! - இதற்கு யான் வஞ்சினங் கூறவேண்டுமோ? (வேண்டா); கண் ஒவ்வாயேனும் களித்து நகுதி - (இங்ஙனம்) நீ கண்ணை ஒவ்வாதிருக்கவும் களித்து நகுகின்றாய்; நின் வண்ணம் இது - நின்சாதி இயல்பு இது; மது உண்பார் சேரியை - கள் குடிப்பார் சேரியிலுள்ளாய்!; நீலம் - நீலமே!

   (வி - ம்.) 'தோற்றாலும் நாணமின்றி நகுதல் நின் சாதியியல்பு! மற்றும் நீகுடியர்சேரியிலிருப்பதாலும் இந்நிலை அடைந்தாய்! (இயற்கைப் பண்பும் நட்புப் பயனும் இந்நிலையைத் தந்தன!) என்கின்றாய்' என்றான்.

   வண்ணம் : நிறத்தையும் சாதியையும் குறிக்கும். நிறம் : கருநிறம். வாழி : இகழ்ச்சிக் குறிப்பு. களித்து நகுதி - தேனை உட்கொண்டு மலர்கின்றாய்; செருக்கி நகைக்கின்றாய்.

   இஃது, 'அறுசீரடியே ஆசிரியத்தளையொடு - நெறிபெற்று வரூஉம் நேரடி முன்னே' (தொல். செய் - 64) எனச் செய்யுளியலிற் கலிக்கு அறுசீரடி விதித்தலின், 'வாழி நீலம்' என ஆசிரியத் தளை பெற்ற அறுசீரடிகள், 'கண்ணொவ்வா யேனும் களித்து நகுதி நின்' என்னும் நேரடியின் முன்னும் பின்னும் வந்த அகநிலைக் கொச்சகம். உம்மை யான் வெண்டளையும் வீரவும். 'பாநிலை வகையே கொச்சகக்கலியென - நூனவில் புலவர் நுவன்றறைந்தனரே' தொல் செய். 155) என அகநிலைக் கொச்சகத்திற்கு விதி கூறலின் ஓசை துள்ளியவாறு முணர்க. இனி, ஆசிரியத்துறை என்பார்க்கு ஆகாமை கடவுள் வாழ்த்தாகிய முதற் கவியிற் கூறினாம்.

( 137 )
2515 பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா
  பைங்கிளி பூவை யென்னு
மாண்பிலா தாரை வைத்தா
  ரென்னுறா ரென்று நக்கு
நாண்குலாய்க் கிடந்த நங்கை
  நகைமுக வமுத மீந்தாள்
பூண்குலாய்க் கிடந்த மார்பிற்
  பொன்னெடுங் குன்ற னாற்கே.

   (இ - ள்.) பாண்குலாய்ப் படுக்கல் வேண்டா - நீ வணக்கச் சொல்லாலே வளைத்து எம்மை அகப்படுத்தல் வேண்டா; பைங்கிளி பூவை என்னும் மாண்பு இலாதாரை வைத்தார் என உறார்? - பச்சைக் கிள்ளையும் பூவையும் என்கிற சிறப்பிலாதாரை வளர்த்து வைத்தார் என்ன இளிவரவினை அடையார்?; என்று நக்கு - என்று கூறி நகைத்து; நாண்குலாய்க் கிடந்த நங்கை - நாணம்