பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1419 

குலவித் தங்கிய நங்கை; பூண்குலாய்க் கிடந்த மார்பின் பொன்னெடுங் குன்றனாற்கு - அணிகள் குலவிக் கிடந்த மார்பையுடைய நெடிய பொன்மலை போன்ற சீவகற்கு; நகைமுக அமுதம் ஈந்தான் - முறுவல் பூத்தலாகிய அமுதத்தை நல்கினாள்.

   (வி - ம்.) சீவகன் இவளுடைய கண்களைப் பாராட்டியதால் இங்ஙனம் கூறி நகைத்தாள். பூவைக்கும் கிளியின் கருத்தேயிருத்தலின் சேர்த்துக் கூறினாள்.

( 138 )
2516 நலங்குவித் தனைய மாதர்
  நன்னல மாய வெல்லாம்
புலம்புவித் தருளி னீங்கிப்
  பகைப்புலம் புக்க வேந்திற்
கலங்குவித் தனைய நம்பி
  கவர்ந்திடக் கலாப மேங்கச்
சிலம்புநொந் திரங்கத் தேன்றார்
  பரிந்துதே னெழுந்த தன்றே.

   (இ - ள்.) கலம் குவித்த அனைய நம்பி - கலன்களை யெல்லாங் குவித்தாற் போன்ற நம்பி; நலம் குவித்த அனைய மாதர் நல் நலம் ஆய எல்லாம் - மகளிரின் அழகெலாம் குவித்தாற் போன்ற இலக்கணையின் சிறந்த அழகையெல்லாம்; சிலம்பு நொந்து இரங்க - சிலம்புகள் வருந்தி இரங்க; தேன்தார் பரிந்து - தேனையுடைய தார் பரிய; கலாபம் ஏங்க - மேகலை ஏங்க; பகைப்புலம் புக்க வேந்தின் அருளின் நீங்கி - பகைவர் நாட்டிற் புக்க வேந்தனைப்போல அருளின் நீங்கி; புலம்புவித்துக் கவர்ந்திட - புலம்பச் செய்து கவர்ந்திட; தேன் எழுந்தது - (அது கண்ட) தேனினம் அஞ்சி எழுந்தது.

   (வி - ம்.) 'நம்பிமாதர் நலத்தை யெல்லாம் சிலம்பிரங்கத் தார்பரியப் புலம்புவித்துக் கவர்ந்திட, அம் மாதரும் கலாபமேங்க நம்பி நலத்தைக் கவர்ந்திடத் தேனினம் எழுந்தது' - என்பர் நச்சினார்க்கினியர்.

   புலம்புவித்தல் - அவசமாக்குதல். பரிந்து - பரிய : எச்சத் திரிபு. இரங்கல், ஏங்கல் என்பவை ஒலித்தற் பொருள.

   கலமானது பல நிலங்களிற் பிறந்த பல மணிகளையும் தன்னிடத்திற் சேர்த்தாற்போலப் பலரிடத்துள்ள நற்குணங்கள் யாவும் தான் சேர்ந்தவன் என்றார்.

( 139 )
2517 திருநிறக் காம வல்வி
  திருக்கவின் கொண்டு பூத்துப்
பெருநிறங் கவினி யார்ந்த
  கற்பகம் பிணைந்த தேபோ