பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 142 

261 வெலற்கருந் தானை நீத்த
  வேந்தனை வெறுமை நோக்கிக்
குலத்தொடுங் கோற லெண்ணிக்
  கொடியவன் கடிய சூழ்ந்தான்.

   (இ - ள்.) நிலத்தலைத் திருவனாள் தன் நீப்பருங் காதல்கூர - நிலவுலகிலே திருமகளனையாள்பால் நீக்கவியலாத தன் காதல் மிகுதலின்; முலைத்தலைப் போகம் மூழ்கி - அவளது முலையின்பத்தே அழுந்தி; வெலற்கு அருந்தானை நீத்த - வெல்ல வியலாத படைவீரரை இழந்த; முகிழ்நிலா முடிகொள் சென்னி வேந்தனை - அரும்பும் ஒளியையுடைய முடியணிந்த சென்னியுடைய வேந்தனை; வெறுமை நோக்கிக் குலத்தொடுங் கோறல் எண்ணி - தனிமை அறிந்து மகவுடனே கொல்ல நினைத்து; கொடியவன் கடிய சூழ்ந்தான் - கொடியவனான அவன் அதற்கு வேண்டும் கடிய தொழில்களைச் சிந்தித்தான்.

 

   (வி - ம்.) நிலத்தலைத்திரு : இல்பொருளுவமை.

 

   அரசுரிமையை இகழ்ந்து வறிய முடியொன்றையே உடையன் என்றிரங்குவார் ”போகமூழ்கி முடிகொள் சென்னி வேந்தன்” என்றார். வேந்தன் - சச்சநத்ன். குலம் என்றது கருவுற்றிருக்கும் தேவியை. கொடியவன் - கட்டியங்காரன்.

( 232 )
262 கோன்றமர் நிகள மூழ்கிக்
  கோட்டத்துக் குரங்கத் தன்கீ
ழேன்றநன் மாந்தர்க் கொல்லா
  மிருநிதி முகந்து நல்கி
யூன்றிய நாட்டை யெல்லா
   மொருகுடை நீழல் செய்து
தோன்றினான் குன்றத் துச்சிச்
   சுடர்ப்பழி விளக்கிட் டன்றே.

   (இ - ள்.) கோன்தமர் நிகளம் மூழ்கிக் கோட்டத்துக் குரங்க - அரசனைச் சார்ந்தோர் விலங்கிலே அழுந்திச் சிறையிலே தாழ; தன்கீழ் ஏன்ற நல்மாந்தர்க் கெல்லாம் இருநிதி முகந்து நல்கி - தன் கீழ்மையை ஒப்பிய நல்ல மாந்தருக்கெல்லாம் பெருஞ்செல்வத்தை அள்ளிக் கொடுத்து; நாட்டை எல்லாம் ஒரு குடை நீழல் செய்து ஊன்றிய - நாட்டையெல்லாம் தன் ஒரு குடையால் நிழல் பரப்பி ஊன்றுவதற்கு; குன்றத்து உச்சி இட்ட சுடர்ப்பழி விளக்கு இட்டுத் தோன்றினான் - குன்றின் உச்சியில் இட்ட விளக்குப்போலப் பழியாகிய விளக்கையிட்டுத் தோன்றினான்.