பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1421 

   (இ - ள்.) ஒண்பொன் நூல் ஓங்கு தாரொடு - ஒள்ளிய பொன்னூலுடனும் ஓங்கிய தாருடனும்; சூட்டும் சுண்ணமும் - மலர்ச் சூட்டும் சுண்ணமும் அணிந்து; சுந்தரம் ஓட்டி - சிந்துரப் பொடியைப் பூசி; குண்டலம் பூட்டிப் பெய்தபின் - குண்டலத்தைப் பூட்டி அணிந்த பிறகு, மோட்டு முத்து ஒளிர்வடம் வளாயினார் - பெருமையுற்ற முத்தாலாகிய விளங்கும் மாலையை வளைத்தனர்.

   (வி - ம்.) சுந்தரம் - சிந்துரப்பொடி. ஓட்டி - பூசி. பொனூல் - பொன்னூல். மோட்டு முத்து - பருத்த முத்து. வளாயினார் - வளைத்தார்.

( 142 )
2520 பானு ரைய்யன பைந்து கிலணிந்
தானி ரைய்யினத் தலங்க லேறனான்
மானி ரைய்யினம் மருளு நோக்கினா
ரூனு யிருணு மொருவ னாயினான்.

   (இ - ள்.) ஆனநிரை இனத்து அலங்கல் ஏறனான் - ஆனிரைத் திரளிலே மாலையணிந்த ஏறு போன்ற சீவகன்; பால் நுரை அன பைந்துகில் அணிந்து - பாலின் நுரை போன்ற தூய ஆடையை அணிந்து; மான்நிரை இனம் மருளும் நோக்கினார் - மான் கூட்டமாகிய திரள மருளும் கண்களையுடைய மகளிரின்; ஊன் உயிர் உணும் ஒருவன் ஆயினான் - ஊனையும் உயிரையும் உண்ணும் ஒப்பற்றவன் ஆனான்.

   (வி - ம்.) பானுரைய்யன், தானிரைய்யின், மானிரைய்யின், என மூவிடத்தும் யகர வாற்று வண்ணநோக்கி விரிந்தன. ஏறு - காளை; இனம் - திரள். மகரவொற்று வண்ணத்தால் விரிந்து இனம் மருளு நோக்கினர் என நின்றது. உணும் - உண்ணும்.

( 143 )
2521 சுநந்தை தன்மகன் சுடர்பொற் சூழித்தே
னினங்க வர்ந்துண விலிற்று மும்மதத்
தநந்த னன்னகை யானை யேறினான்
குனிந்த சாமரை குளிர்சங் கார்த்தவே.

   (இ - ள்.) சுநந்தை தன் மகன் சுநந்தை மகனாக வளர்ந்த சீவகன்; சுடர்பொன் சூடி - ஒளிவிடும் பொற்சூழியினையும்; தேன் இனம் கவர்ந்து உண விலிற்றும். மும்மதத்து - வண்டுகளின் திரள கவர்ந்து உண்ணும்படி சொரியும் மும்மதத்தினையும்; அநந்தன அன்ன கை - அநந்தன என்னும் பாம்பைப் போன்ற கொடிய கையினையும் உடைய; யானை ஏறினான் - யானையின் மீது அமர்ந்தான்; குனிந்த சாமரை, குளிர்சங்கு ஆர்த்த - (அப்போது) கவரிகள் வீசின; ஒலிக்கும் சங்குகள் ஆர்த்தன.