| முத்தி இலம்பகம் |
1424 |
|
|
|
(இ - ள்.) அமரின் ஆலித்து - போரில் வந்து முழங்கி; அடிநிலம் உறுதல் அருவருத்து நாணி - அடிநிலம் பொருந்து தலை அருவருத்து நாணி; இடுமயிர் சிறகராக எழுந்து மேல் பறப்ப போல - இட்டமயிர் சிறகுபோலே தோன்ற எழுந்து வானிற் பறப்பனபோல; படுமழைத் துளியின் பாய்மரப் பரந்தன - மழைத்துளிபோல அளவற்றுக் குதிரைகள் பரவின; பொன்தேர் நிரந்த - பொற்றோர்கள் நிரந்தன; இடைநிலம் இன்றி வேழம் ஈண்டின - இடைவெளி யில்லாமல் யானைகள் திரண்டன; மள்ளர் தொக்கார் - வீரரும் குழுமினர்.
|
|
(வி - ம்.) மேற் 'கடற்படை வெள்ளம்' என்றார். அப்படை பரந்தபடி யிங்குக் கூறினார்.
|
|
ஆலித்து - முழங்கி. இடுமயிர் : வினைத்தொகை. சிறகர் - சிறகு. பாய்மா - குதிரை. தேர் நிரந்த என மாறுக. மள்ளர் - மறவர். 'துளி எண்ணிறத்தற்குவமை' என்பர் நச்சினார்க்கினியர். அஃதாவது பாய்ந்து செல்லும் சிறந்த குதிரைகள் மழைத்துளிகள் போன்ற எண்ணிறந்தன என்க.
|
( 148 ) |
| 2526 |
கொழுமடற் பெண்ணை யீன்ற | |
| |
குரும்பையுஞ் செப்புங் கொன்ற | |
| |
விழைமுலைத் தடத்தி னாடன் | |
| |
கணவனைக் காண வேகிக் | |
| |
கழுமொலி யரவ வானங் | |
| |
கனைபெயல் கடற்பெய் தன்ன | |
| |
குழுமொலி யரவ மீண்டிக் | |
| |
கொடிநகர் பொலிந்த தன்றே. | |
|
|
(இ - ள்.) கொழுமடல் பெண்ணை ஈன்ற குரும்பையும் செப்பும் கொன்ற - வளமுடைய மடல் கொண்ட பனையீன்ற குரும்பையையும் செப்பையும் வருத்திய; இழைமுலைத் தடத்தினாள்தன் - அணி புனைந்த முலையாள் இலக்கணையின்; கணவனைக் காண ஏகி - கணவனாகிய சீவகனைக் காணச் சென்று; கழுமு ஒலி அரவ வானம் கனை பெயல் கடல் பெய்த அன்ன - நிறைந்த ஒலியையுடைய முகில் மிகுபெயலைக் கடலிலே பெய்தாற் போன்ற; குழுமு ஒலி அரவம் ஈண்டிக் கொடிநகர் பொலிந்தது - கூடிய பேரொலி திரண்டு கொடியையுடைய நகர் விளக்கமுற்றது.
|
|
(வி - ம்.) ஒலியரவம் : ஒருபொருட் பன்மொழி. வானம் கடலிலே பெய்த ஒலியன்ன திரண்ட அரவத்தோடே யீண்டி.
|
|
பெண்ணை - பனை. இழை - அணிகலன். முலைத்தடத்தினாள்; இலக்கணை. கணவன் : சீவகன்.
|
( 149 ) |