முத்தி இலம்பகம் |
1429 |
|
|
(இ - ள்.) அட்டும் தேன் அணிந்த மாலைப் பவளக் கொம்பு அணிந்தது ஒத்தார் - ஒழுகுந் தேன் பொருந்திய மாலையையுடையதொரு பவளக் கொம்பை ஒப்பனை செய்த தன்மையை ஒத்த அம் மகளிர்; அல்குல் வண்ணப்பட்டு ஒளித்து ஒழியப் பசுங்கதிர்க் கலாபம் தோன்ற - தம்மல்குலிடத்துடுத்த நிறமிக்க பட்டாடை மறைப்பவும் மறையாமல் பசிய கதிரையுடைய மேகலையணி புறத்தே தோன்ற நிற்ப; மட்டு ஒளித்து உண்ணும் மாந்தர் மாண்புபோல் மறைந்து - கள்ளை மறைந்திருந்து பருகுங் களிமாக்கள் மாண்பு போன்று; குட்ட நீர்க்குவளைக் கண்கள் விருந்துண - ஆழமான நீரிலுள்ள குவளைபோலும் தங் கண்கள் இவனிடத்துப் புதுமையை அவனறியாதபடி கரந்துண்ணும்படி; விரும்பி நின்றார் - விரும்பியே நின்றார்.
|
(வி - ம்.) ”கள்ளைக் கரந்துண்ணு மாக்கள் கரக்கவுந் தோன்று மாறு போல, மேகலை வண்ணப்பட்டிலே ஒளித்துக் கிடவா நிற்கவும் சிறிது தோன்றுற என்க” என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 156 ) |
2534 |
பெரும்பொரு ணீதிச் செங்கோற் | |
|
பெருமக னாக்கம் போலப் | |
|
பரந்திட மின்றி மேலாற் | |
|
படாமுலை குவிந்த கீழா | |
|
லரும்பொரு ணீதி கேளா | |
|
வரசனிற் சுருங்கி நந்து | |
|
மருங்குநொந் தொழிய வீதி | |
|
மடந்தைய ரிடங்கொண் டாரே. | |
|
(இ - ள்.) பெரும் பொருள் நீதிச் செங்கோல் பெருமகன் ஆக்கம் போல - பெரிய பொருளாகிய அறம் பொருந்திய செங்கோலையுடைய பெருமகனின் ஆக்கம் பால; மேல் இடமின்றிப் பரந்து - மேலே மார்பில் இடமின்றாம்படி பரந்து; படாமுலை குவிந்த சாயாத முலைகள் குவிந்தன; கீழ் - கீழே; அரும் பொருள் நீதி கேளா அரசனின் சுருங்கி நந்தும் மருங்கு - அரிய பொருளாகிய அறனைக் கேளாத அரசனைப் போல் சுருங்கிக் கெட்ட இடை; நொந்து அழிய - வருந்துமாறு; மடந்தையர் வீதி இடம் கொண்டார் - மடந்தையர்கள் தெருவை இடமாகக் கொண்டனர்.
|
(வி - ம்.) இது முதலாக மூன்று செய்யுட்கள் பின்பு வந்தோரைக் குறிக்கின்றன. 'ஆல்' இரண்டும் அசைகள்.
|
பெரும் பொருள் ஆகிய நீதி என்க. மேலால், கீழால் என்பவற்றுள் ஆல்கள் : அசைகள். நந்தும் - மெலிந்த, மடந்தையர் வீதியிடங் கொண்டார் என்க.
|
( 157 ) |