நாமகள் இலம்பகம் |
143 |
|
(வி - ம்.) [தன் கீழ்]: கீழ்: இடமுமாம். நன்மாந்தர்: இகழ்ச்சி. ஊன்றிய: பெயரெச்சமும்ஆம்.
|
|
கோன் - சச்சந்தன். நிகளம் - தளை; விலங்கு. கோட்டம் - ஈண்டுச் சிறைக்கோட்டம். குரங்குதல் - தாழ்தல்
|
( 233 ) |
263 |
பருமித்த களிறு மாவும் |
|
பரந்திய றேரும் பண்ணித் |
|
திருமிக்க சேனை மூதூர்த் |
|
தெருவுதொ றெங்கு மீண்டி |
|
யெரிமொய்த்த வாளும் வில்லு |
|
மிலங்கிலை வேலு மேந்திச் |
|
செருமிக்க வேலி னான்றன் |
|
றிருநகர் வளைந்த தன்றே. |
|
(இ - ள்.) பருமித்த களிறும் மாவும் பரந்துஇயல் தேரும் பண்ணி - அணிபுரிந்த களிறும் குதிரையும் பரவிய இயலையுடைய தேரும் தகுதியாக அமைத்துக்கொண்டு; திருமிக்க சேனை- செல்வம்மிக்க படைத்திரள்; எரிமொய்த்த வாளும் வில்லும் இலங்குஇலை வேலும் ஏந்தி - நெருப்பிலே முழுகிய வாளும் வில்லும் விளங்கு இலைமுகமுடைய வேலும் ஏந்திக் கொண்டு; மூதூர் தெருவுதொறும் எங்கும் ஈண்டி - பழமையான நகரின் தெருக்களிலும் பிற இடங்களிலும் திரண்டு; செருமிக்க வேலினான் தன் திருநகர் வளைந்தது - போர்த்தொழிலிற் சிறந்த வேலேந்திய சச்சந்த மன்னனின் அழகிய அரண்மனையைச் சூழ்ந்தது.
|
|
(வி - ம்.) உள்நிற்கும் ஊர்திகளும் உட்பட வளைந்து அந்தப் புரத்தினுட் புகுதாது நின்றது கண்டு வாயிலோன் உணர்த்துகின்றமை மேலே கூறுகின்றார்.
|
( 234 ) |
264 |
நீணில மன்ன போற்றி |
|
நெடுமுடிக் குருசில் போற்றி |
|
பூணணி மார்ப போற்றி |
|
புண்ணிய வேந்தே போற்றி |
|
கோணினைக் குறித்து வந்தான் |
|
கட்டியங் கார னென்று |
|
சேணிலத் திறைஞ்சிச் சொன்னான் |
|
செய்யகோல் வெய்ய சொல்லான். |
|