| முத்தி இலம்பகம் | 
1430  | 
 | 
  | 
|  2535 | 
செல்வர்க்கே சிறப்புச் செய்யுந் |   |  
|   | 
  திருந்துநீர் மாந்தர் போல |   |  
|   | 
வல்குற்கு முலைக்கு மீந்தா |   |  
|   | 
  ரணிகல மாய வெல்லா |   |  
|   | 
நல்கூர்ந்தார்க் கில்லை சுற்ற |   |  
|   | 
  மென்றுநுண் ணுசுப்பு நைய |   |  
|   | 
வொல்கிப்போய் மாடஞ் சோ்ந்தா |   |  
|   | 
  ரொருதடங் குடங்கைக் கண்ணார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) செல்வர்க்கே சிறப்புச் செய்யும் திருந்து நீர் மாந்தர் போல - செல்வமுடையவர்க்கே மேலும் வேண்டுஞ் சிறப்புப் புரியும் பொல்லாத தன்மையுடைய மக்களைப்போல; அணிகலம் ஆய எல்லாம் - பூண்களாகிய எல்லாவற்றையும்; அல்குற்கும் முலைக்கும் ஈந்தார் - அல்குலுக்கும் முலைக்குங் கொடுத்தனர்; நல்கூர்ந்தார்க்குச் சுற்றம் இல்லை என்று - வறியவர்க்குச் சுற்றம் இல்லை என்று; நுண் நுசுப்பு நைய - நுண்ணிய இடை வருந்த; ஒல்கிப் போய் - நுடங்கிச் சென்று; ஒரு தடம் குடங்கை கண்ணார் மாடம் சேர்ந்தார் - ஒரு பெரிய குடங்கை போலும் கண்ணினார் மேனிலத்தை அடைந்தார். 
 | 
| 
    (வி - ம்.) திருந்து நீர் மாந்தர் என்றது இகழ்ச்சி. ”செல்வரை எல்லாருஞ் செய்வர் சிறப்பு” என்றார் வள்ளுவனாரும் (குறள். 752). ”நல்கூர்ந்தார்க்கில்லை சுற்றம்” என்பது நுசுப்பின் கூற்றென்க. ஒரு குடங்கைத் தடங்கண்ணார் என மாறினுமாம். அல்குற்கும் முலைக்கும் செல்வர் உவமை; நுசுப்பிற்கு நல்கூர்ந்தார் உவமை. 
 | 
( 158 ) | 
|  2536 | 
கார்வளர் மின்னு வீசுங் |   |  
|   | 
  குண்டலங் காய்பொ னோலை |   |  
|   | 
யோ்வளர் பட்ட மேற்ப |   |  
|   | 
  வணிந்திருள் சுமந்து திங்க |   |  
|   | 
ணீர்வளர் நீலம் பூத்து |   |  
|   | 
  நிரைத்தபோ னிரைத்த மேலால் |   |  
|   | 
வார்வளர் முலையி னார்த |   |  
|   | 
  மாழைவாண் முகங்கண் மாதோ. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) திங்கள் - பல திங்கள்கள்; கார் வளர் மின்னு வீசும் குண்டலம் - காரிலே தோன்றிய மின்னை வீசுகின்ற குண்டலமும்; காய் பொன் ஓலை - காய்ந்த பொன்னால் ஆன ஓலையும்; ஏர் வளர் பட்டம் - அழகு வளரும் பட்டமும்; ஏற்ப அணிந்து - பொருந்த அணிந்து; இருள் சுமந்து - இருளைச் சுமந்து; நீர 
 |