| முத்தி இலம்பகம் |
1431 |
|
|
|
வளர் நீலம் பூத்து - நீரில் தோன்றும் நீலத்தை மலர்ந்து; நிரைத்த போல் - நிரைத்தன போல; வார்வளர் முலையினார்தம் மாழை வாள் முகங்கள் - வாரில் வளரும் முலையினாருடைய இளைய ஒளி பொருந்திய முகங்கள்; மேலால் நிரைத்த - மேனிலத்தே நிரைத்தன.
|
|
(வி - ம்.) கார் - முகில். காய் பொன்னோலை என்க; வினைத்தொகை. ஏர் - அழகு. இருள் - கூந்தலுக்கும், திங்கள் முகத்திற்கும், நீலம் கண்களுக்கும் உவமைகள் என்க. மாழை - இளைமை.
|
( 159 ) |
| 2537 |
குறையணி கொண்ட வாறே | |
| |
கோதைகா றொடர வோடிச் | |
| |
சிறையழி செம்பொ னுந்தித் | |
| |
தேன்பொழிந் தொழுக வேந்திப் | |
| |
பறையிசை வண்டு பாடப் | |
| |
பாகமே மறைய நின்றார் | |
| |
பிறையணி கொண்ட வண்ணல் | |
| |
பெண்ணொர்பால் கொண்ட தொத்தார். | |
|
|
(இ - ள்.) குறை அணி கொண்ட ஆறே - (செம்பாதி) குறையாகப் பூண் அணிந்த அளவிலே ; கோதை கால் தொடர ஓடி - (தொடுத்துக்கொண்டிருந்த) கோதைகள் தம்மிற் பிணங்க ஓடி; செம்பொன் உந்திச் சிறையழி தேன் பொழிந்து ஒழுக ஏந்தி - செம்பொன் உந்தியிலே வரம்பு கடந்த தேன் பொழிந்தொழுக அக்கோதையை ஏந்தி; பறை இசை வண்டு பாட - பறந்து ஒலிக்கும் வண்டுகள் பாட; பாகமே மறைய நின்றார் - செம்பாதி அணியாத நாணத்தாலே ஒரு பாகம் மறைய நின்றவர்கள்; பிறை அணி கொண்ட அண்ணல் - பிறையணிந்த பெருமான்; பெண் ஒர்பால் கொண்டது ஒத்தார் - ஒரு பாலிலே கொள்ளப்பட்ட பெண்ணை யொத்தார்.
|
|
(வி - ம்.) பறை - பறைத்தல்.
|
|
குறையணி - அரைகுறையான ஒப்பனை. கோதை - மாலை. கால் தொடர்தல் : ஒரு சொல். பிணங்குதல் என்க. உந்தி - கொப்பூழ். அக்கோதையை ஏந்தி என்க. பறத்தலையும் இயையையும் உடைய வண்டென்க. அண்ணல் : சிவபெருமான். அண்ணல் ஓர்பால் கொண்ட பெண் ஒத்தார் என்க.
|
( 160 ) |
| 2538 |
பொன்னரி மாலை பூண்டு | |
| |
பூஞ்சிகை குலாவி முன்கை | |
| |
மின்னரிச் சிலம்பு தொட்டு | |
| |
விகுப்பொடு விரைந்து போவான் | |
|