பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1432 

2538 கன்னிய ராடி நோக்கித்
  தம்மைத்தாங் கண்டு நாணிப்
பின்னவை யணிந்து செல்வா
  ரிடம்பெறா தொழிந்து போனார்.

   (இ - ள்.) விருப்பொடு விரைந்து போவான் - (சீவகனைக் காணும்) விருப்பாலே விரைந்து போதற்கு; பொன்னரி மாலை பூண்டு - பொன்னரி மாலையைக் (கழுத்திலே) பூண்டு; பூஞ்சிகை குலாவி - அழகிய கூந்தலை வறிதே முடித்து; முன்கை - மின் அரிச் சிலம்பு தொட்டு - முன் கையிலே ஒளியுடைய, பரலணிந்த சிலம்பை அணிந்து (நின்ற); கன்னியர் ஆடி நோக்கி - பெண்கள் கண்ணாடியைப் பார்த்து; தம்மைத் தாம் கண்டு நாணி - தம்மை அதிலே கண்டு நாணுற்று; பின் அவை அணிந்து செல்வார் - பிறகு, அவற்றை அணிந்து செல்கின்றவர்கள்; இடம்பெறாது ஒழிந்து போனார் - இடம் கிடையாமல் தவிர்ந்து போனார்.

   (வி - ம்.) சிகையிலே சூட்டுதற்குரிய பொன்னரி மாலையைக் கழுத்திலே பூண்டு என்பது பூண்டு என்னும் வினையாற் போந்தது. அடியிலணிதற்குரிய சிலம்பை முன்கையிலிட்டு என்க. ஆடி - கண்ணாடி. பின் அவற்றை அவற்றிற்குரிய விடத்தே அணிந்து என்க.

( 161 )
2539 முத்துலாய் நடந்த கோல
  முலைமுதன் முற்ற மெல்லாம்
வித்திய வேங்கை வீயும்
  விழுப்பொனும் விளங்கக் காமத்
தொத்துநின் றெரிந்து கண்டார்
  கண்சுடச் சுடர்ந்து நின்றா
ரொத்தொளிர் காம வல்லி
  யொருங்குபூத் துதிர்ந்த தொத்தார்.

   (இ - ள்.) காமத் தொத்து நின்று எரிந்து கண்டார் கண் சுடச் சுடர்ந்து நின்றார் - காமத் தீயின் கொத்து நின்று எரிந்து சுடுதலாலே, கண்டவர் கண்களைச் சுட நின்ற மகளிர்; முத்து உலாய் நடந்த கோல முலை முதல் முற்றம் எல்லாம் - முத்துக்கள் உலவி நடந்த, அழகிய முலை தோன்றற்குக் காரணமான இடம் எல்லாம்; வித்திய வேங்கை வீயும் விழுப்பொனும் விளங்க - விதைத்த வேங்கை மலரும் சிறந்த பொன்னும் போலப் பசலை விளங்குதலால்; ஒத்து ஒளிர் காமவல்லி ஒருங்கு பூத்து உதிர்ந்தது ஒத்தார் - ஒப்புற விளங்கும் காமவல்லிகள் ஒருங்கே பூத்து உதிர்ந்தது போன்றார்.