பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1435 

பரந்து வந்து இவ்விடத்தை விரும்பின தன்மை போல; எங்கும் வேரி நாறு அலங்கல் மாலை மின் இழை மயங்கி - நகரெங்கும் தேன் மணக்கும் அலங்கலாகிய மாலையும் ஒளிவிடும் அணிகலனுங் கலந்து; புதவந் தோறும் குவளையும் மரையும் பூரித்துப் பூத்து - வாயில் தோறும் குவளைமலரும் தாமரை மலரும் பூரிப்புடன் மலர்ந்து; மாரி மாமயில் அனாரும் மைந்தரும் மயங்கினார் - முகில் கண்டமயில் போன்ற மங்கையரும் மைந்தரும் கலந்து நின்றனர்.

   (வி - ம்.) குவளை மகளிர் கண்களுக்கும் தாமரை ஆடவர் கண்களுக்கும் கொள்க. அன்றி மகளிர் முகத்திற்குத் தாமரையும் கண்கட்குக் குவளையுங் கொள்ளினும் பொருந்தும். தம்மைக் காக்கும் அரசனாதலின் இருபாலாரும் அன்பு மிகுதியால் உடன் வந்தனர்.

( 166 )
2544 கோதைதாழ் குடையி னீழற் கொற்றவன் பருதி யாக
மாதரார் முகங்க ளென்னுந் தாமரை மலர்ந்த தெண்ணீர்க்
காதநான் ககன்ற பொய்கைக் கடிநகர் குவளை பூத்துப்
பேதுறு கின்ற போன்ற பெருமழைக் கண்கண் மாதோ.

   (இ - ள்.) கோதை தாழ் குடையின் நீழல் கொற்றவன் பருதி ஆக - மாலை தாழுங் குடையின் நிழலில் உள்ள சீவக மன்னன் ஞாயிறாகக் கொண்டு; மாதரார் முகங்கள் என்னும் தாமரை மலர்ந்த - பெண்டிர்களின் முகங்களாகிய தாமரை மலர்கள் மலர்ந்தன; காதம் நான்கு அகன்ற கடிநகர் தெண்ணீர்ப் பொய்கை - நான்கு காதமளவும் அகன்ற கடிநகராகிய இத் தெளிநீர்ப் பொய்கையிலே; பெரு மழைக் கண்கள் - பெரிய மழைக் கண்கள்; குவளை பூத்துப் பேதுறுகின்ற போன்ற - (அத்தாமரை மலரிடையே) குவளை மலர்ந்து இனிமையுற்று மயங்குதல் போன்றன.

   (வி - ம்.) காவிரிப் பூம்பட்டினத்தையும் நான்கு காதப் பரப்புடையதாகக் கூறியுள்ளனர். 'காத நான்குங் கடுங்குரல் எழுப்பி' (சிலப். 5 : 133).

( 167 )
2545 மாந்தரு மாவுஞ் செல்ல மயங்கிமே லெழுந்த நீறு
தேந்தரு கோதை யார்தந் தெண்மட்டுத் துவலை மாற்ற
வாய்ந்தபொன் னகர மெங்கு மணிகல வொளியி னாலே
காய்ந்துகண் கலக்கப் பூத்த கற்பக மொத்த தன்றே

   (இ - ள்.) மாந்தரும் மாவும் செல்ல மயங்கி மேல் எழுந்த நீறு - மக்களும் புரவிகளும் செல்வதாலே மயங்கி மேலே எழுந்த துகளை; தேன் தரு கோதையார்தம் தௌ்மட்டுத் துவலை மாற்ற - தேன் பொருந்திய மாலையணிந்த மகளிர் வீசுகின்ற பூவில் உள்ள தேன் துளி மாற்ற; ஆய்ந்த பொன் நகரம் எங்கும் அணிகல ஒளியினாலே - ஆய்வுற்ற பொன்னையுடைய நகரம