| முத்தி இலம்பகம் |
1436 |
|
|
|
எங்கும் மைந்தர்கள் எல்லோரும் அரசன்முன் வீசுகின்ற அணி கலன்களின் ஒளியாலே; காய்ந்து கண் கலக்கப் பூத்த கற்பகம் ஒத்தது - வானுலகக் கற்பகத்தைக் காய்ந்து எதிர்ப்பட்ட அளவிலே கொடுத்ததொரு கற்பகத்தை ஒத்தது.
|
|
(வி - ம்.) பொன்னகர் கற்பகத்தை ஒத்தது, அணிகலவொளி நகரம் எங்கும் நிறைந்தது என்பதனால் மைந்தர்கள் அணிகலன்களை வீசினர் என்பது பெறப்படும், கண்கலக்க - எதிர்ப்பட்ட, பொன்னுலகக் கற்பகம் கேட்ட பின்னரே கொடுக்கும் : இக் கற்பகங்கள் கண்ட அளவிலே கொடுத்தன. அரசன்முன் மகிழ்ச்சியினால் அணிகலன்களை எறிந்தனர். பூத்த கற்பகம் எனவே கொடை கொள்க.
|
( 168 ) |
| 2546 |
பெண்பெற்ற பொலிசை பெற்றார் | |
| |
பிணையனார் பெரிய யாமுங் | |
| |
கண்பெற்ற பொலிசை பெற்றா | |
| |
மின்றெனக் கரைந்து முந்நீர் | |
| |
மண்பெற்ற வாயுள் பெற்று | |
| |
மன்னுவாய் மன்ன வென்னாப் | |
| |
புண்பெற்ற வேலி னான்மேற் | |
| |
பூமழை தூவி னாரே. | |
|
|
(இ - ள்.) பிணையனார் பெண்பெற்ற பொலிசை பெற்றார் - மான்பிணையனைய வீரமகளும் திருமகளும் பெண் தன்மையைப் பெற்றபேறு பெற்றனர்; பெரிய யாமும் இன்று கண் பெற்ற பொலிசை பெற்றாம் எனக் கரைந்து - (கற்பினால்) அவர்களினும் மேம்பட்ட யாமும் இன்று கண் பெற்றதனாற் பெற்ற பேறு பெற்றோம் என்று வாயாரக் கூறி; மன்ன! - மன்னனே; முந்நீர் மண்பெற்ற ஆயுள் பெற்று மன்னுவாய் என்னா - கடலும் நிலமும் பெற்ற ஆயுளைப் பெற்று நீ வாழ்வாயாக என்று வாழ்த்தி; புண் பெற்ற வேலினான் மேல் பூ மழை தூவினார் - புண் பொருந்திய வேலான் மேல் மலர்மாரி பெய்தனர்.
|
|
(வி - ம்.) 'உப்பும் உலகும் உள்ளளவும் வாழ்வீர்' என்பது உலக வழக்கு. வீரமகளும் திருமகளும் விடாமல் இவனிடம் உறைதலின் பெண்பெற்ற பேறு பெற்றாராயினார். இங்ஙனம் நீடுவாழ்கென வாழ்த்துதற்கு உரியோர் கற்புடை மகளிர். ஏனையோர் வாழ்த்துதலிற் பயனின்றாம். இத்துணையும் உயர்குடிப் பிறந்தோர் உறையும் தெருவைக் கூறினார்.
|
( 169 ) |
வேறு
|
| 2547 |
சுண்ணமேற் சொரிவார் தொழுதுதொங்கல் வீழ்ப்பார் | |
| |
தண்ணென் சந்தனநீ ரார்ந்துதேன் றுளும்பும் | |
| |
வண்ணப்பந் தெறிவார் வளையொலிப்ப வோச்சிக் | |
| |
கண்ணியிட் டெறிவார் கலவைநீர் தெளிப்பார். | |
|