நாமகள் இலம்பகம் |
144 |
|
(இ - ள்.) செய்யகோல் வெய்யசொல்லான் - சிவந்த கோலையும் வெஞ்சொல்லையும் உடைய வாயிலோன்; நீள்நில மன்ன போற்றி - பெருநிலத்துக்கு வேந்தனே! காத்தருள்க! நெடுமுடிக் குருசில் போற்றி! - நீண்ட முடியணிந்த அரசனே! காத்தருள்க!; பூண்அணி மார்ப போற்றி - பகைவர் கவசம் பூண்பதற்குக் காரணமான மார்பனே! காத்தருள்க!; புண்ணிய வேந்தே போற்றி - நலம்புரியும் மன்னனே! காத்தருள்க!; கட்டியங்காரன் நினைக்கோள் குறித்து வந்தான் - கட்டியங்காரன் உன்னைக் கொல்வது கருதி வந்துளான்; என்று சேண்நிலத்து இறைஞ்சிக் சொன்னான் - என்று தொலைவான தரையிலே (வீழ்ந்து) வணங்கிக் கூறினான்.
|
|
(வி - ம்.) போற்றி: பரிகாரம். 'அரும்பூண் அற எறிந்தாங்கு' என்பர் மேலும். போற்றி நான்கு கூறியது நிலத்திற்கும் குலத்திற்கும் வீரத்திற்கும் தருமத்திற்கும் நின்னையொழிய இல்லையென்று இரங்கினான்.
|
|
'கோண்' எனினும் மாறுபாடாம்.
|
( 235 ) |
265 |
திண்ணிலைக் கதவ மெல்லாந் |
|
திருந்துதா முறுக்க வல்லே |
|
பண்ணுக பசும்பொற் றேரும் |
|
படுமதக் களிறு மாவுங் |
|
கண்ணகன் புரிசை காக்குங் |
|
காவல ரடைக வென்றான் |
|
விண்ணுரு மேறு போன்று |
|
வெடிபட முழங்குஞ் சொல்லான். |
|
(இ - ள்.) விண் உரும் ஏறு போன்று வெடிபட முழங்கும் சொல்லான் - வானத்தின்கண் பேரிடிபோல அதிர்ச்சியுண்டாக முழங்கும் சொல்லினான்; திண்நிலைக் கதவம் எல்லாம் வல்லே திருந்து தாழுறுக்க - அசைவில்லாத (அரண்மனை மதிலின்) நிலைக்கதவுகளை யெல்லாஞ் செப்பமாகத் தாழிடுக; பசும்பொன் தேரும் மதம்படு களிறும் மாவும் (வல்லே) பண்ணுக - புதிய பொற்றேர்களையும் மதம்மிகுங் களிறுகளையும் குதிரைகளையும் அணிசெய்க; கண்அகன் புரிசை காக்கும் காவலர் (வல்லே) அடைக என்றான் - இடம் அகன்ற (அரண்மனை) மதிலைக் காக்கும் வீரர்கள் விரைந்து வருக என்றான்
|
|
(வி - ம்.) 'வல்லே' என்றது, எவ்விடத்துங் கூட்டுக. வெடிபட. - வெடித்தல் உண்டாக.
|
|
இஃது இராசதத்தாற் கூறினான். [இராசதம் - அரசனுக்குரிய இயல்பு; துணையில்லாத தனிமையினும் எழுந்தது.]
|
( 236 ) |