| முத்தி இலம்பகம் | 
1442  | 
 | 
  | 
|  2557 | 
நஞ்சு குடித் தாலுநவை யின்றுதவ நின்றா |   |  
|   | 
லஞ்சியொளித் தாலுமா ணில்லைதவ முலந்தாற் |   |  
|   | 
குஞ்சரத்தின் கோட்டிடையு முய்வர்தவ மிக்கா |   |  
|   | 
ரஞ்சலில ரென்றுமற னேகளைக ணென்பார். |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) நஞ்சு குடித்தாலும் தவம் நின்றால் நவை இன்று - நஞ்சைப் பருகினும் தவம் இருந்தாற் கெடுதி இன்று; தவம் உலந்தால் அஞ்சி ஒளித்தாலும் அரண் இல்லை - தவம் கெட்டால் அஞ்சி மறைந்தாலும் அரண் இல்லை; தவம் மிக்கார் குஞ்சரத்தின் கோட்டிடையும் உய்வர் - தவம் மிகுந்தவர் யானையது கோட்டின் இடையேயும் உட்பட உய்ந்துபோவர்; என்றும் அறனே களைகண் என்பார் அஞ்சல் இலர் - எப்போதும் அறனே ஆதரவு என்பவர் எதற்கும் அஞ்சமாட்டார். 
 | 
| 
    (வி - ம்.) தன்னை ஆக்கிய சச்சந்தனைக் கொன்றும் கட்டியங்காரன் அரசாண்டிருந்ததனால், 'நஞ்சு குடித்தாலும் தவம் நின்றால் நவையின்றாம்' என்றார், தாமரை வியூகம் வகுத்து அதனுள்ளிருந்தும் அவன் பட்டமை கருதி, 'அஞ்சி ஒளித்தாலும் தவம் உலந்தால் அரண் இல்லை' என்றார். சீவகன் யானையால் இடறுண்டிறக்கவேண்டும் என்று கட்டியங்காரன் கருதினும் சீவகன் உய்ந்தமை கருதித், 'தவம் மிக்கார் கோட்டிடையினும் உட்பட உய்வர்' என்றார். 
 | 
| 
    களைகண் : முதுகண் என்றாற் போலும் வழக்கு, முதுகண் - காப்பாக இருக்கும் முதியவர். 'முற்றிழை மகளிர்க்கு மதுகணாம்' என்பது பெருங்கதை (1. 36 : 189). 
 | 
( 180 ) | 
|  2558 | 
முரல்வாய சூற்சங்க முடமுட் |   |  
|   | 
  டாழை முகைவிம் முங் |   |  
|   | 
கரைவாய முத்தீன்று கானன் |   |  
|   | 
  மேயுங் கடற்சோ்ப்ப |   |  
|   | 
னுரைவாய் நகர்பரவப் போகி |   |  
|   | 
  யொண்பொ னெயிழ்சூழ்ந்த |   |  
|   | 
விரைவாய் பூம்பிண்டி வேந்தன் |   |  
|   | 
  கோயிற் கெழுந்தானே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) முடமுள் தாழை முகை விம்மும் கரைவாய் கானல் - வளைந்த முள்ளையுடைய தாழையின் அரும்பு மலர்கின்ற கரையை இடத்தே உடைய கானலிலே; முரல்வாய் சூல் சங்கம் முத்துஈன்று மேயும் கடல் சேர்ப்பன் - ஒலிக்கும் வாயையுடைய, சூல்கொண்ட சங்கு முத்துக்களை யீன்று, (வருத்தம் இன்றித் தானே போய்) மேய்கின்ற; கடல் சேர்ப்பன் - கடலையுடைய சேர்ப்பன்; உரைவாய நகர் பரவ - புகழிடத்ததாகிய நகர் வாழ்த்த; போகி - வலமாகப் போகி; ஒண் பொன் எயில 
 |