| முத்தி இலம்பகம் |
1445 |
|
|
|
உடையாய்; நிலவிரி கதிர் அணி நிகர் அறு நெறியினை - நிலவின் கதிர் போன்ற தூய ஒப்பற்ற நெறியையுடைய; நிலவிரி கதிர் அணி நிகர்அறு நெறியை நின் - அத்தகைய நின்னுடைய; அலர்கெழு மரைமலர் அடியிணை தொழுதும் - மலர்தல் பொருந்திய தாமரை மலர் போன்ற இணையடிகளை வணங்குகின்றோம்.
|
|
(வி - ம்.) அணி : உவமஉருபு. நிலவின் கதிர் போன்ற நெறி : சுக்கிலத் தியானம்.
|
( 185 ) |
| 2563 |
மறுவற வுணர்ந்தனை மலமறு திகிரியை | |
| |
பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வனை | |
| |
பொறிவரம் பாகிய புண்ணிய முதல்வநின் | |
| |
னறைவிரி மரைமலர் நகுமடி தொழுதும். | |
|
|
(இ - ள்.) மறுஅற உணர்ந்தனை - குற்றமற உணர்தலுடையாய்; மலம் அறு திகிரியை - குற்றமற்ற ஆழியையுடையாய்; பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வனை - பொறிகட்கு எல்லையாகிய புண்ணியத்திற்குக் காரணமாகிய தன்மையை உடையாய்; பொறி வரம்பு ஆகிய புண்ணிய முதல்வ! நின் - அத்தகைய நின்னுடைய; நறைவிரி மரைமலர் நகும் அடி தொழுதும் - தேன் விரியும் தாமரை மலர் போன்ற அடிகளைத் தொழுகின்றனம்.
|
|
(வி - ம்.) இவை மூன்றும் தாழம்பட்ட ஓசையும் முடுகியலுமாய் ஒரு பொருள்மேல் மூன்றடுக்கிக் கந்தருவ மார்க்கத்தான் இடைமடக்கிய தேவபாணித் தாழிசைக் கொச்சக ஒருபோகு.
|
|
திகிரி - அறவாழி. பொறியுணர் வடங்கிய விடத்தே உணரப் படுபவன் ஆகலின் பொறி வரம்பாகிய புண்ணிய முதல்வனை என்றார். ”இந்திரியங்கட்கு வரம்பாகிய முதல்வன் என்றது, அவற்றிற்கு அவ்வருகு பட்டிருக்கின்ற முதல்வன் என்றவாறு” என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 186 ) |
| 2564 |
நந்தா விளக்குப் புறமாகென நான்கு கோடி | |
| |
நொந்தார்க் கடந்தான் கொடுத்தான் பின்னை நூறு மூதூர் | |
| |
கந்தார் கடாத்த களிறுங்கொடித் தோ்க ணூறுஞ் | |
| |
செந்தா மரைமே னடந்தானடி சோ்த்தி னானே. | |
|
|
(இ - ள்.) நொந்தார்க் கடந்தான் - பகைவரை வென்ற அம்மன்னன்; நந்தா விளக்குப் புறம் ஆக என நான்கு கோடி கொடுத்தான் - (இறைவற்குத்) தூண்டாவிளக்குப் பொருளாக என்று நான்கு கோடி கொடுத்தான்; பின்னை - மேலும், நூறு மூதூர் - நூறு பழம்பதிகளையும்; கந்துஆர் கடாத்த (நூறு) களிறும் - தூணிற் கட்டுதல் பொருந்திய நூறு களிறுகளையும்;
|