| முத்தி இலம்பகம் |
1446 |
|
|
|
கொடித் தேர்கள் நூறும் - கொடியையுடைய தேர்கள் நுற்றையும்; செந்தாமரைமேல் நடந்தான் அடிசேர்த்தினான் - மலர்மேல் நடந்த அருகனடிக்கு வழிபாட்டிற்குக் கொடுத்தான்.
|
|
(வி - ம்.) நொந்தார் - பகைவர். நொந்தார்க் கடந்தான் என்றது சீவகனை. விளக்குப்புறம் - திருவிளக்கெரித்தற் பொருட்டுக் கொடுக்குங் கொடைப் பொருள். கந்து - தூண். செந்தாமரைமேனடந்தான்; அருகக் கடவுள்.
|
( 187 ) |
| 2565 |
வாடாத மாலை மணிமாலைபொன் மாலை முத்த | |
| |
நீடார மாலை நிழன்மாண்ட பவழ மாலை | |
| |
மாடார்ந் திழியு மருவிம்மலர் பொற்ப வேற்றிக் | |
| |
கூடார்க் கடந்தான் வலங்கொண்டிடஞ் சென்று புக்கான். | |
|
|
(இ - ள்.) வாடாத மாலை - வாடாத மாலைகளாகிய; மணி மாலை பொன்மாலை முத்தம் நீடுஆர மாலை - மணிமாலையும் பொன் மாலையும் நீண்ட முத்து மாலையும்; நிழல் மாண்ட பவழ மாலை - ஒளிவிடும் பவழ மாலையும்; மாடு ஆர்ந்து இழியும் அருவி மலர் - பக்கத்திலே நிறைந்து இறங்கும் அருவி நீரும் மலரும்; பொற்ப ஏற்றி - அழகுறத் திருவடியிற் சேர்த்து; கூடாரக் கடந்தான் - பகைவரை வென்ற அம் மன்னன்; இடம் சென்று புக்கான் - தன் இருக்கையைப் போய்ச் சேர்ந்தான்.
|
|
(வி - ம்.) வாடாத மாலைகளாகிய என்க. நிழல்மாண்ட - ஒளியால் மாட்சிமைப்பட்ட. மாடு - பக்கம். அருவிம்மலர் : மகரம் வண்ண நோக்கி விரிந்தது. பொற்ப - பொலிவுற. கூடார் - பகைவர். இடம் - தன்னிடமாகிய அரண்மனை.
|
( 188 ) |
வேறு
|
| 2566 |
உலமரு நெஞ்சி னொட்டா | |
| |
மன்னவ ரூர்ந்த யானை | |
| |
வலமருப் பீர்ந்து செய்த | |
| |
மணிகிளர் கட்டி லேறி | |
| |
நிலமகள் கணவன் வேந்தர் | |
| |
குழாத்திடை நிவந்தி ருந்தான் | |
| |
புலமகள் புகழப் பொய்தீர் | |
| |
பூமகட் புணர்ந்து மாதோ. | |
|
|
(இ - ள்.) நிலமகள் கணவன் - உலக மன்னவன்; உலமரு நெஞ்சின் ஒட்டா மன்னவர் ஊர்ந்த யானை - கலங்கும் மனமுடைய பகைவேந்தர்கள் ஏறிவந்த யானையின்; வலம் மருப்பு ஈர்ந்து செய்த மணிகிளர் கட்டில் ஏறி - வென்றியையுடைய
|