பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 145 

266 புலிப்பொறிப் போர்வை நீக்கிப்
  பொன்னணிந் திலங்கு கின்ற
வொலிக்கழன் மன்ன ருட்கு
  முருச்சுடர் வாளை நோக்கிக்
கலிக்கிறை யாய நெஞ்சின்
  கட்டியங் கார னம்மேல்
வலித்தது காண்டு மென்று
  வாளெயி றிலங்க நக்கான்.

   (இ - ள்.) புலிப்பொறிப் போர்வை நீக்கி - புலியின் தோலாற் செய்யப்பட்ட உறையை நீக்கி; ஒலிக்கழல் மன்னர் உட்கும் பொன் அணிந்து இலங்குகின்ற உருச்சுடர் வாளை நோக்கி-ஒலிசெயுங் கழல் அணிந்த வேந்தர்கள் அஞ்சும், பொன்னால் அணிசெய்யப்பெற்று விளங்கும் ஒளிமிகும் அழகிய வாளைப் பார்த்து; கலிக்கு இறைஆய நெஞ்சின் கட்டியங்காரன் நம்மேல் வலித்தது காண்டும் என்று - தீமைக்கு நிலைமையான உள்ளமுடைய கட்டியங்காரன் நம்மேல் வலிமை காட்ட வந்ததைக் காண்போம் என்று; வாள் எயிறு இலங்க நக்கான் - ஒளிமிகும் பற்கள் தோன்ற நகைத்தான்.

 

   (வி - ம்.) இது வீரத்தின்கண் எள்ளுதலாற் பிறந்த நகை.

 

   ['புலிப்பொறிப் போர்வை கவசம்' எனவும், 'ஊர்திகள் இன்மையின் கவசம் நீக்கினான் எனவும் 'போர்வை உறையும் என்ப' எனவும் நச்சினார்க்கினியர் நவில்வர்.]

( 237 )
267 நங்கைநீ நடக்கல் வேண்டு
  நன்பொருட் கிரங்கல் வேண்டா
கங்குனீ யன்று கண்ட
  கனவெலாம் விளைந்த வென்னக்
கொங்கலர் கோதை மாழ்கிக்
  குழைமுகம் புடைத்து வீழ்ந்து
செங்கயற் கண்ணி வெய்ய
  திருமகற் கவலஞ் செய்தாள்.

   (இ - ள்.) நங்கை நீ நன்பொருட்கு நடக்கல் வேண்டும் - நங்கையே ! நீ நம் நல்ல பொருளைக் காப்பதற்குச் செல்லுதல் வேண்டும்; இரங்கல் வேண்டா - இங்கிருந்து வருந்தாதே; (ஏன் எனின்); நீ அன்று கங்குல் கண்ட கனவு எலாம் விளைந்த என்ன - நீ அன்றைய இரவு கண்ட கனவுகள் எல்லாம் பயன் பட்டன என்று (மன்னன் விசயையை அணுகிக்) கூற; செங்கயற்