| முத்தி இலம்பகம் |
1451 |
|
|
| 2573 |
பாரிடம் பரவ நாட்டி | |
| |
யவனது சரிதை யெல்லாந் | |
| |
தாருடை மார்பன் கூத்துத் | |
| |
தான்செய்து நடாயி னானே. | |
|
|
(இ - ள்.) தன்கண் பேரிடர் நீக்கிப் பெரும்புணை ஆய தோழற்கு - தன்னிடம் பேரிடரை நீக்கிப் பெரிய புணையாக இருந்த தோழனாகிய சுதஞ்சணனுக்கு; ஓர் இடம் செய்து - ஒரு கோயிலைக் கட்டி; அவன் உரு பொன்னால் இயற்றி - அவன் உருவத்தைப் பொன்னாற் செய்து; பாரிடம் பரவ ஊரும் நாட்டி - உலகம் வாழ்த்த ஊரும் கொடுத்து; அவனது சரிதை எல்லாம் கூத்துத் தான் செய்து - அவனுடைய வரலாற்றை யெல்லாம் கூத்தாகத் தான் அமைத்து; தார் உடை மார்பன் நடாயினான் - மாலையணிந்த மார்பனாகிய சீவகன் நடத்தினான்.
|
|
(வி - ம்.) பேரிடர் என்றது. கட்டியங்காரனால் கொலையுண்ணலை. தனது துன்பக்கடலுக்குத் தெப்பமாகிய என்க. தோழன் : சுதஞ்சணன். இடம் - ஈண்டுக் கோயில். பாரிடம் : ஆகுபெயர். சரிதை - வரலாறு.
|
( 196 ) |
| 2574 |
ஊன்விளை யாடும் வைவே லுறுவலி சிந்தித் தேற்பத் | |
| |
தான்விளை யாடி மேனா ளிருந்ததோர் தகைநல் லாலைத் | |
| |
தேன்விளை யாடு மாலை யணிந்துபொற் பீடஞ் சோ்த்தி | |
| |
யான்விளை யாடு மைந்தூ ரதன்புற மாக்கி னானே. | |
|
|
(இ - ள்.) ஊன் விளையாடும் வைவேல் உறுவலி சிந்தித்து - ஊன் பழகும் கூரிய வேலேந்திய மிகுவலியுடைய சீவகன் மேலும் ஆராய்ந்து; மேல்நாள் தான் விளையாடி இருந்தது. ஓர் தகை நல் ஆலை - முற்காலத்தில் தான் விளையாடியிருந்ததாகிய ஒரு தகுதியுடைய ஆலமரத்தை; தேன் விளையாடும் மாலை ஏற்ப அணிந்து - வண்டுகள் பழகும் மாலையைப் பொருந்த அணிந்து; பொன் பீடம் சேர்த்தி - பொன்னாற் பீடம் அமைத்து; ஆன் விளையாடும் ஐந்து ஊர்அதன்புறம் ஆக்கினான் - ஆக்கள் விளையாடும் ஐந்து ஊர்களை அதற்கு இறையிலி யாக்கினான்.
|
|
(வி - ம்.) அதன் நிழலிலே ஆனிரை தங்குதலும் பால் சொரிதலும் அறமாமென்ப.
|
( 197 ) |
வேறு
|
| 2575 |
கொட்ட மேகம ழுங்குளிர் தாமரை | |
| |
மொட்டின் வீங்கிய வெம்முலை மொய்குழ | |
| |
லட்டுந் தேனழி யும்மது மாலையார் | |
| |
பட்ட மெண்மரும் பார்தொழ வெய்தினார். | |
|