பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1456 

இச்செய்யுளோடு,

“கிளை கலித்துப் பகைபேணாது
வலைஞர் முன்றில் மீன்பிறழவும்
விலைஞர் குரம்பை மாவீண்டவும்
கொலைகடிந்தும்“,(196 - 99)

   எனவரும் பட்டினப்பாலை ஒப்புநோக்கற்பாலது.

( 206 )

வேறு

2584 கதங்கனல் யானை நெற்றிக்
  கட்டிய பட்ட மேபோன்
மதங்கமழ் கோதை யல்குன்
  மனாக்கிடந் திமைத்துக் காமப்
பதம்பல பார்க்குஞ் சாயற்
  பாவைமற் றநங்க மாலை
விதம்படக் கருதி மாதர்
  விளைத்தது விளம்ப லுற்றேன்.

   (இ - ள்.) கதம் கனல் யானை நெற்றி கட்டிய பட்டமே போல் - சீற்றத்தினால் அழலும் யானையின் நெற்றியிலே கட்டிய பட்டத்தைப் போல; அல்குல் மனாக் கிடந்து இமைத்து - அல்குலிலே மணி கிடந்து இமைக்கப்பட்டு; காமப் பதம் பல பார்க்கும் - காமத்தை யுண்டாக்கும் செவ்வி பலவற்றையும் பார்க்கின்ற; மதம் கமழ் கோதை - மிகுதியான மணம் கமழும் மலர் மாலையையும்; சாயல் - மென்மையினையும் உடைய; பாவை மற்று அநங்க மாலை - தேசிகப் பாவை அந்த அநங்கமாலையின்; விதம்படக் கருதி கூற்றிலே தான்படக் கருதி; மாதர் விளைத்தது விளம்பல் உற்றேன் - அவள் நிகழ்த்தியதைக் கூறலுற்றேன்.

   (வி - ம்.) என்பது, பதுமையாருடன் கூட அழைத்துக் கொள்ளல் முறை யன்மையின், பின்பு அழைக்கக் கருதியிருந்த தேசிகப்பாவை, சீவகன் தன்னிடத்தே அன்பின்மையின், தன்னை மறந்தானெனக் கருதித் தானே வந்தவள், சீவகன் கருத்தறியாமல், அவன் அநங்க மாலையை நினைத்துக் கொண்டிருக்கிறானெனக் கருதி, அவள் தோழியைப் போல் ஓலை கொண்டு வந்தாளாக நடித்ததொரு செய்தியைக் கூறுகின்றார்.

   ‘தானுடைய முல்லை யெல்லாம் தாது உகப் பரித்திட்டானே‘ (சீவக. 686) எனவே, அவளைக் கட்டியங்காரன் கூடியது பெற்றாம். அதனாற் சீவகன் அவளைப் புணர்ந்தானெனக் கூறுதல் ஆசிரியர்க்குக் கருத்தன்றென்க.

( 207 )