பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1457 

வேறு

2585 ஈர்ந்தண் கோதை யிளையார்குழாத்திடை
  யாளெங்கோனடி சோ்வலென்
றார்ந்த செந்தா மரைமுகத்தினா
  ளடிகள்வந்தீங் ககன்கடை யுளாள்
சார்ந்த சாயற் றடமாமுலைத்
  தையல்வல்லே வருகென் றான்
சோ்ந்து மன்னர் முடிவைரவிற்
  றிளைக்குஞ் செம்பொற் செறிகழலினான்.

   (இ - ள்.) அடிகள்! - அடிகளே!; ஆர்ந்த செந்தாமரை முகத்தினாள் - நிறைந்த செந்தாமரை போலும் முகத்தினையுடைய; ஈர்ந்தண் கோதை - சாலவுந் தண்மை பொருந்திய கோதையா ளொருத்தி; இளையார் குழாத்திடையாள் வந்து - தோழிகளின் திரளிடத்தளாய் வந்து; எங்கோன் அடிசேர்வல் என்று - எம் மரசன் அடிகளைக் காண்பேன் என்று; இங்கு அகன் கடையுளாள் - இக் கோயிலின் பெரிய வாயிலில் நிற்கிறாள் (என்று வாயிலோன் கூற); சேர்ந்த மன்னர் முடி வைரவில் திளைக்கும் - வணங்கும் மன்னர் முடி சேர்தலாலே வைரத்தின் ஒளி பயிலுகின்ற; செம்பொன் செறி கழலினான் - பொன்னாற் செறிவுற்ற கழலணிந்த சீவகன்; சார்ந்த சாயல் தடமாமுலைத் தையல் வல்லே வருக என்றான் - (அவ்வாறு) வந்த சாயலையும் பெரிய முலையையும் உடைய அவள் விரைய வருவாளாக என்றான்.

   (வி - ம்.) நாம் அழைப்பதற்கு முன்னே தேசிகப் பாவை வந்தாள் என்று உணர்தலின், ‘வல்லே வருக‘ என்றான். அன்றி, அநங்கமாலையை வல்லே வருக என்றானாயின், அவள் எக்காலத்து வருவாள் என்று அவள் வரவை விரும்பியிருந்தானாம். ஆகவே, அவளைத் தீண்டி ஒப்பனை செய்தலின், தனக்கு நிகழ்ந்த வேட்கையைக் கட்டியங்காரற்கஞ்சிக் கரந்திருந்து, அவன் அவளை வலிதிற் கொண்டு போதற்கும் பொறுத்திருந்தானாம். அவ்வாறாயின், அவள் வீரத்திற்கிழுக்காம்.

( 208 )
2586 அருவிலை நன்கலஞ் செய்போர்வை
  யன்னநாண வடியொதுங்கிச்சென்
றுருவ மொவ்வா தொசியுநுசுப்
  பொல்கிக்கோமா னடிதொழுதபின்
மருவின் சாயன் மணிமெல்விரல்
  கூப்பியோலை மரபினீட்ட
விரவி யென்ன விளங்குமொளி
  யிறைவன் கொண்டாங் கதுநோக்குமே