|  முத்தி இலம்பகம் | 
 1459  | 
 | 
  | 
| 
 புதிய மணியும் வேய்ந்து மேம்படும் பொன்னாற் செறிந்த கழ்லுடையாய்!; யான் இப்படி - என்று யான் இவ்வாறு. 
 | 
| 
    (வி - ம்.) இப்பாட்டுக் குளகம். மாலை வேலிற்கு அடை. 
 | 
| 
    அடிகள் : விளி. ஆங்கு : அசை. வேலான் : கட்டியங்காரன். அரங்கு - கூத்தாடு களம். கடி - மணம். சிறுவ என்று என வருவித்துக் கொள்க. 
 | 
 ( 210 ) | 
|  2588 | 
என்ன நாளு மரற்றப்பொறான் |   |  
|   | 
  விடுப்பப்போகி யினமழைகண்மொய்த் |   |  
|   | 
தன்னந் துஞ்சு மடிக்குடிலினுள் |   |  
|   | 
  ளன்றியான் கொண்ட நாடகத்தினைத் |   |  
|   | 
துன்னி நம்பி யுருவுதீட்டித் |   |  
|   | 
  தொங்கல்வேய்ந்து தொழுதாற்றநீ |   |  
|   | 
மன்னர் மன்ன மதிதோய்குடையாய் |   |  
|   | 
  மகளிர்காம மறைத்தொழி தியோ. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) என்ன நாளும் அரற்றப் பொறான் விடுப்பப் போகி - எல்லா நாளினும் புலம்பப் பொறானாகி என்னை அவன் விடுவிப்ப, யான் சென்று; இன மழைகள் மொய்த்து அன்னம் துஞ்சும் அடிக்குடிலினுள் அன்றி - திரளான முகில்கள் மொய்த்து அன்னம் துயிலும் அடிச் சேரியிலே இருந்ததன்றி; யான் கொண்ட நாடகத்தினைத் துன்னி - யான் ஆடின நாடகத்தைத் தான் பொருந்திப் பார்த்தாய்போல; நம்பி உருவு தீட்டி - நம்பியாகிய நின் வடிவை எழுதி; தொங்கல் வேய்ந்து தொழுது ஆற்ற - மாலையணிந்து வணங்கிச் செல்லவும்; மன்னர் மன்ன! - அரசர்க்கரசனே!; மதிதோய் குடையாய்! - திங்களனைய குடையாய்!; நீ மகளிர் காமம் மறைத்து ஒழிதியோ? - நீ மாதர்களிடத்திற் காமத்திற் புலப்படாமல் ஒளித்து அதனைத் தவிர் கின்றாயோ? 
 | 
| 
    (வி - ம்.) இப் பாட்டும் அடுத்த பட்டுடன் தொடரும். 
 | 
| 
    ‘ஒழிதியோ‘ என்று தொழுது ஆற்ற‘ எனப் பிற்கூட்டுவர் நச்சினார்க்கினியர். 
 | 
| 
    பொறானாகி விடுப்ப என்க. அடிக்குடில் - அடிச்சேரி. துன்னி - துன்ன. நம்பி : முன்னிலைப்படர்க்கை. தொங்கல் - மாலை. குடையாய் நீ என இயைத்துக்கொள்க. ஆற்ற என்பதற்கு ஒருவாறு யான் ஆற்றியிருப்பவும் எனினுமாம். 
 | 
 ( 211 ) | 
|  2589 | 
கண்க டுஞ்சா கதிர்முத்தமே |   |  
|   | 
  காலுங்கையார் வளைகழலுமாற் |   |  
|   | 
பண்கொள் சொல்லார் மாமைநீங்கிப் |   |  
|   | 
  பைம்பொன் போர்த்த படாமுலைகளு |   | 
 
 
 |