முத்தி இலம்பகம் |
1460 |
|
|
2589 |
மண்கொள் வேன்மன்னர் நண்பின்மையை | |
|
வையக்கெல்லா முடனறையவோ | |
|
பெண்க ளாவி விடுத்ததொழிபவோ | |
|
பெரியோர்நண்படைந் தார்பெயர்பவோ. | |
|
(இ - ள்.) கண்கள் துஞ்சா கதிர்முத்தமே காலும் - கண்கள் துஞ்சாதனவாகி ஒளிரும் முத்துக்களையே உமிழும்; கைஆர் வளை கழலும் - கையில் நிறைந்த வளைகள் கழலும்; பண்கொள் சொல்லார் மாமை நீங்கி - பண்கொண்ட சொல்லாருக்குரிய பொன்னிறம் நீங்கி; படாமுலைகளும் பைம்பொன் போர்த்த - சாயாத முலைகளும் புதிய பசலை போர்த்தன; மண்கொள் வேல் மன்னர் நண்பு இன்மையை - நிலங்கொண்ட வேலேந்திய வேந்தரின் நட்பின்மையை; வையக்கு எல்லாம் உடன் அறையவோ! - உலகுக்கெல்லாம் உடனே பறையறையவோ?; பெண்கள் ஆவி விடுத்து ஒழிபவோ? - மகளிர் உயிர் அவரைக் கைவிட்டுப் போக அமையுமோ? ; பெரியோர் நண்பு அடைந்தார் பெயர்பவோ? - பெரியோருடைய நட்பைப் பெற்றவர் விட்டு நீங்க அமையுமோ?
|
(வி - ம்.) துஞ்சாதனவாகி முத்தம் காலும் என்க. முத்தம் - கண்ணீர்த்துளி ஆல் - அசை, மாமை - பொன்னிறம். பொன்போர்த்த - பசலைபூத்தன. வையக்கு - வையத்திற்கு. நண்பின்மை - நட்புப்பண் பின்மையை.
|
( 212 ) |
2590 |
அறனிழலா யுலகளிக்கு நின்னார | |
|
மாலையணி வெண்குடைப் | |
|
புறனிழலி னயலேனோ யான்புல்லா | |
|
மன்னர்நிணம் பொழியும்வேன் | |
|
மறனிழன் மதயானையாய் வந்தவென் | |
|
றோழி வாமலேகை | |
|
திறனழி யாமையின்னே விடுத்தருளுக | |
|
தோ்வேந்தர் வேந்தனே. | |
|
(இ - ள்.) புல்லா மன்னர் நிணம் பொழியும் வேல் - பகை மன்னரின் நிணத்தைப் பெய்யும் வேலையும்; மறன் நிழல் மத யானையாய்! - வீரத்தின் ஒளியையுடைய மதகளிற்றினையும் உடையாய்!; தேர்வேந்தர் வேந்தனே! - தேரையுடைய வேந்தருக்கு வேந்தனே!; அதன் நிழலாய் உலகு அளிக்கும் - அறத்தின் ஒளியாக உலகைக் காக்கின்ற; நின் ஆர மாலை அணி வெண்குடைப் புறன் நிழலின் அயலேனோ யான்? - நின் முத்தமாலை அணிந்த வெண்குடையிடத்துள்ள நிழலுக்குப
|