| முத்தி இலம்பகம் | 
1461  | 
 | 
  | 
| 
 புறத்தேனோ யான்?; வந்த என் தோழி வாமலேகை - (இம்முடங்கலைக் கொண்டு) அங்கு வந்த என் தோழி வாமலேகை யென்பாளின்; திறன் அழியாமை இன்னே விடுத்தருளுக - தகுதி கெடாமல் இப்போதே விடுத்தருளுக. 
 | 
| 
    (வி - ம்.) 'அடிகள்' என்று தொடங்கும் (2587) செய்யுள் முதல் இதுவரையுள்ள பொருள்கள் தேசிகப்பாவை கொணர்ந்த முடங்கலில் உள்ளவை. 
 | 
| 
    இவன் அநங்கமாலையை உட்கொண்டிருப்பானாகக் கருதி, இவற்கு அவள் எழுதின ஓலைகொண்டு வந்தாளொரு தோழியாகத் தேசிகப் பாவை நடித்தாள். இதனால் தன் வேட்கையை அறிவித்தாளாயினாள் 
 | 
( 213 ) | 
|  2591 | 
புள்ளும்யாழுங் குழலுமேங்கப் |   |  
|   | 
  புனைந்துவல்லா னினைந்தியற்றிய |   |  
|   | 
பள்ளிச்செம்பொற் படையமளிமேன் |   |  
|   | 
  மழலைமணியாழ் தான்வெளவிக் |   |  
|   | 
கொள்ளுந் தீஞ்சொ லலங்காரப்பூங் |   |  
|   | 
  கொடியைப்புல்லி மணிக்குவட்டினை |   |  
|   | 
யௌ்ளிவீங்கித் திரண்டதோண்மேற் |   |  
|   | 
  குழைவில்வீச விருந்தானே. |   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) புள்ளும் யாழும் குழலும் ஏங்க - (தேசிகப் பாவையின் கையில் உள்ள) வளையும் யாழும் குழலும் ஒலிக்க இசையை நுகர்ந்து; வல்லான் நினைந்து புனைந்து இயற்றிய - வல்லானொருவன் சிந்தித்து அணிந்து இயற்றிய; பள்ளி - பள்ளியிலே; செம்பொன் படை அமளிமேல் - செம்பொன்னாற் படுத்த அணையின் மேலே; மழலை மணியாழ் தான் வெளவிக் கொள்ளும் தீஞ்சொல் அலங்காரப் பூங்கொடியை - மழலை பொருந்தியதும், அழகிய யாழ்தான் கருதிக்கொள்ளும் தகையது ம் ஆன இனிய மொழியையுடைய, ஒப்பனை செய்யப்பட்ட மலர்க்கொடி போல் வாளை; மணிக் குவட்டினை எள்ளி வீங்கித் திரண்ட தோள்மேல் புல்லி - மணிகளிழைத்த மலையை இகழ்ந்து பருத்துத் திரண்ட தோளிலே தழுவி; இருந்தான் - அமர்ந்திருந்தான். 
 | 
| 
    (வி - ம்.) புள் - வளை. 'புட்கை போகிய புள்தலை மகார்' (மலைபடு 253) என்றார். தாளத்தை ஒற்றுதலின் வளையொலித்தன. 
 | 
( 214 ) | 
|  2592 | 
அங்கைசேப்பக் குருகிரங்க |   |  
|   | 
  வலங்கலம்பூங் குழறுயல்வர |   |  
|   | 
மங்கைநல்லார் பவழவம்மி |   |  
|   | 
  யரைத்தசாந்த மலர்பெய்மாலை |   | 
 
 
 |