பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1462 

2592 பொங்குதூமக் கொழுமென்புகை
  புரிந்தபஞ்ச முகவாசமுந்
தங்குதாம மார்பினாற்குந்
  தையலாட்குங் கொண்டேந்தினாரே.

   (இ - ள்.) அங்கை சேப்ப - உள்ளங்கை சிவப்ப; குருகு இரங்க - வளை ஒலிக்க; அலங்கல் அம் பூங்குழல் துயல்வர - மாலையணிந்த அழகிய மலர்க்குழல் அசைய; மங்கை நல்லார் - பெண்கள்; பவழ அம்மி அரைத்த சாந்தம் - பவழ அம்மியின் மேல் அரைத்த சாந்தினையும்; மலர்பெய் மாலை - மலர் மாலையையும் தூமம் பொங்கு கொழுமென் புகை - தூமமூட்டியிலே பொங்குகின்ற உயர்ந்த மெல்லிய புகையையும்; புரிந்த பஞ்சமுக வாசமும் - விரும்பிய ஐந்து முகவாசங்களையும்; தாமம் தாங்கும் மார்பினாற்கும் தையலாட்கும் கொண்டு ஏந்தினார் - மாலை தங்கிய மார்பினானுக்கும் தேசிகப் பாவைக்கும் எடுத்து ஏந்தினார் (மங்கையர்).

   (வி - ம்.) அங்கை - அகங்கை; உள்ளங்கை. சேப்ப - சிவப்ப; குருகு - வளையல். அரைத்த - அரைக்கப்பட்ட. தூமம் - தூமமூட்டி; ஆகுபெயர். மார்பினான் : சீவகன். தையலாள் : தேசிகப்பாவை.

( 215 )
2593 அருளுமாறென்னை யநங்கமாலை
  யடித்திதோழி யன்றோவெனத்
தெருளலான்செல்வக் களிமயக்கினாற்
  றிசைக்குமென்னறி வளக்கியகருதி
மருளிற்சொன்னாய் மறப்போனோயா
  னின்னையென்ன மகிழைங்கணை
யுருளுமுத்தார் முகிழ்முலையினா
  ளுள்ளத்துவகை தோற்றினாளே.

   (இ - ள்.) அருளும் ஆறு என்னை - நீ என்னை அருளுவதற்குக் காரணம் என்ன?; அநங்கமாலை அடித்தி தோழி அன்றோ என - (யான்) அநங்கமாலையாகிய அடித்தியின் தோழி அன்றோ என்று (நகைமொழி) நவில; செல்வக் களிமயக்கின் தெருளலான் - செல்வக் களிப்பின் மயக்கத்தாலே என்னைத் தெளியான் (என்று); நால் திசைக்கும் என் அறிவு அளக்கிய கருதி - நாற்றிசைக்கும் என் அறிவை அளந்து காட்ட எண்ணி; மருளின் சொன்னாய் - பேதைமையாற் கூறினை; யான் நின்னை மறப்பனோ என்ன - யான் உன்னை மறப்பேனோ என்ன?; மகிழ் ஜங்கணை - மகிழும் ஜங்கணையையும் தன்னிடத்தே கொண்ட; உருளும் முத்துஆர் முகிழ் முலையினாள் உள்ளத்து உவகை.