| முத்தி இலம்பகம் |
1465 |
|
|
| 2596 |
பரந்தவா ணெடுங்கட் செவ்வாய்த் | |
| |
தேசிகப் பாவை கோல | |
| |
வரங்கின்மே லாடல் காட்டி | |
| |
யரசனை மகிழ்வித் தாளே. | |
|
|
(இ - ள்.) பரந்த வாள் நெடுங்கண் செவ்வாய்த் தேசிகப் பாவை - பரவிய ஒளியுடைய நீண்ட கண்களையும் செவ்வாயையும் உடைய தேசிகப் பாவை; நரம்பு மீது இறத்தல் செல்லா - நரம்பின் ஓசையைத் தப்பாத; நல்லிசை முழவும் யாழும் இரங்கு தீங்குழலும் ஏங்க - இன்னிசை தரும் முழவும் யாழும் ஒலிக்கும் இனிய குழலும் இயம்ப; கிண்கிணி சிலம்பொடு ஆர்ப்ப - கிண்கிணியும் சிலம்பும் ஒலிக்க; அரங்கின்மேல் ஆடல் காட்டி - கூத்தரங்கிலே தன் ஆடலைக் காண்பித்து; அரசனை மகிழ்வித்தாள் - வேந்தனைக் களிப்பூட்டினாள்.
|
|
(வி - ம்.) 'இடக்கண் இளியா வலக்கண் குரலா - நடப்பது தோலியற் கருவி ஆகும்' என்றார்.
|
( 219 ) |
| 2597 |
கடற்படை மன்னர் தம்மைக் | |
| |
காதலின் விடுத்துக் காமன் | |
| |
றொடுத்தகோன் மார்பிற் றங்கத் | |
| |
தூமலர்க் கொம்ப னாளை | |
| |
வடித்தவின் னமிர்தி னாரப் | |
| |
பருகலின் மழைக்கட்செவ்வாய் | |
| |
துடித்துவண் டுண்ணத்தூங்குஞ் | |
| |
செந்தளி ரொத்ததன்றே. | |
|
|
(இ - ள்.) கடல்படை மன்னர் தம்மைக் காதலின் விடுத்து - கடல் போன்ற படையையுடைய வேந்தர்களை அன்புடைன் விடுத்த பிறகு; காமன் தொடுத்த கோல்மார்பில் தங்க - காமன் விடுத்த கணை மார்பிலே முழுகுதலின்; தூமலர்க் கொம்பு அனாளை - தூய மலர்க்கொம்பு போன்ற தேசிகப் பாவையை; வடித்த இன் அமிர்தின ஆரப்பருகலின் - தெளிவித்த இனிய அமிர்தத்தைப் பருகுதல்போல உளம் நிறைய நுகர்ந்த தால்; மழைக்கண் செவ்வாய் துடித்து - மழைக்கண்ணாளின் செவ்வாய் துடித்து; வண்டு உண்ணத் தூங்கும் செந்தளிர் ஒத்தது - வண்டுகள் உண்ணத் தூங்கும் சிவந்த தளிரைப் போன்றது.
|
|
(வி - ம்.) வண்டு அதரத்தில் வடுவிற்கு உவமை; இல்பொருளுவமை. இசையும் கூத்தும் காமத்தை வளர்க்கும் கருவிகளாதலிற் பின்னர்ப் புணர்ச்சி கூறினார்.
|
( 220 ) |